சென்னை: பாமகவில் தந்தை மகனுக்கு இடையே கட்சியை யார் கைப்பற்றுவது என்ற மோதலின் ஒரு பகுதியாக, ராமதாசின் பொதுக்குழு அறிவிப்புக்கு எதிராக, அன்புமணி தரப்பில் போட்டி  பொதுக்குழு கூட்டம் அறிவிக்கப்பட்டு உள்ளது. இது பாமகவினரிடையே பெரும் குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது.

பாமக நிறுவனர் ராமதாஸ் தரப்பில் வரும் 17ந்தேதி  பாமக பொதுக்குழு கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், பாமக தலைவர் அன்புமணி தலைமையில் ஆகஸ்டு 9ந்தேதி பொதுக்குழு கூட்டம் நடைபெறும் எ அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்த  போட்டி  பொதுக்குழு  அறிவிப்பு பாமக தொண்டர்கள், மற்றும் நிர்வாகிகள் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.

பாமகவில் எழுந்துள்ள மோதல் காரணமாக கட்சி இரண்டாக பிளவுபட்டுள்ளது. இதையடுத்து, சாகும்வரை நான்தான் பாமக தலைவர் என்று ராமதாஸ் கூறி வருகிறார். ஆனால், அன்புமணி நாதான் தலைவர் என்று கூறி வருகிறார். இருவரும் ஏட்டிக்குபோட்டியாக கட்சியை நடத்தி வருகின்றனர். இதனால் பல முக்கிய தலைவர்கள், வன்னியர் அமைப்புகள் மாற்று கட்சிகளை நாடும் நிலை உருவாகி உள்ளது.

இந்த நிலையில், பாமக பொதுக்குழு தொடர்பாக, பாமக நிறுவனர் ராமதாஸ் சார்பில், பாமக தலைமை நிலை​யம் வெளி​யிட்​டுள்ள அறிக்​கையில்,  பாமக நிறு​வனர் மற்​றும் தலை​வர் ராம​தாஸ் உத்தர​வுபடி, திண்​டிவனம் – புதுச்​சேரி செல்​லும் வழி​யில் உள்ள பட்​டானூர் சங்​கமித்ரா திருமண மண்​டபத்​தில் வரும் 17-ம் தேதி காலை 10 மணிக்கு சிறப்பு பொதுக்​குழுக் கூட்​டம் நடை​பெற உள்​ளது. இதில், மாநில, மாவட்ட, மாநகர, ஒன்​றிய, நகர நிர்​வாகி​கள் தவறாது கலந்​து​கொள்​ளு​மாறு கேட்​டுக்​கொள்​ளப்​படு​கிறார்​கள். இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கு போட்டியாக அன்புமணியும் பொதுக்குழு கூட்டத்தை கூட்டி உள்ளார்.  வரும்  9-ம் தேதி (ஆகஸ்டு 9) பொதுக்​குழுக் கூட்​டம் நடை​பெறும் என்று  அறி​வித்​துள்​ளார்.

இது தொடர்​பாக அன்​புமணி மற்றும் பொதுச் செய​லா​ளர் வடிவேல் ராவணன் வெளி​யிட்ட அறிக்​கை​யில், “பாமக பொதுக்​குழுக் கூட்​டம் மாமல்​லபுரத்​தில் உள்ள கான்ப்​ளுயன்ஸ் அரங்​கில் ஆக. 9-ம் தேதி நடை​பெறும். பொதுக்​குழு உறுப்​பினர்​கள் தவறாது பங்​கேற்க வேண்​டும்” என்று தெரிவிக்​கப்​பட்​டுள்​ளது.

பாமகவின் போட்டி பொதுக்குழு கூட்டத்தால் பாமகவினரிடைய மேலும் குழப்பம் ஏற்பட்டுள்ளது.

கலைஞர் பாணி: “என் உயிர் மூச்சி இருக்கும் வரை நான் தான் பாமக தலைவர்”! அடம் பிடிக்கும் ராமதாஸ் விழிபிதுங்கும் அன்புமணி…

கெத்து காட்டப்போவது யார்? ராமதாஸ், அன்புமணி இன்று தனித்தனிக்கூட்டம்…. பாமகவில் பரபரப்பு…

அன்புமணி பா.ம.க. கொடியை பயன்படுத்த தடை விதிக்க வேண்டும்! டிஜிபியிடம் பாமக நிறுவனர் மனு