சென்னை:   வரும் 26ந்தேதி  இரண்டு நாள் பயணமாக தமிழ்நாடு வருகை தரும் பிரதமர் மோடி,  சிதம்பரம் நடராஜர் கோவிலில் இருந்து ‘மனதின் குரல்’ (Mann ki batt) நிகழ்ச்சி யில் பேசுகிறார் .

.

பிரதமர் மோடி இந்த மாதம் (ஆகஸ்டு) மீண்டும் தமிழ்நாடு வருகை தர உள்ளார். அப்போது சிதம்பரம் நடராஜர் கோவிலுக்கு செல்லும் பிரதமர், அங்கிருந்து, ‘மனதின் குரல் நிகழ்ச்சி’யில் பேச இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. அடுத்தாண்டு தமிழ்நாடு  சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கு அடுத்தடுத்த பயணங்களை பிரதமர் மோடி மேற்கொள்கிறார்.

 பிரதமர் நரேந்திர மோடி இரண்டு நாள் பயணமாக கடந்த  ஜூலை  26-ந்தேதி இரவு தமிழகம் வந்தார். அப்போது, தூத்துக்குடி சர்வதேச விமான நிலையத்தில் புதிய முனையத்தையும், மறுநாளான 27-ந்தேதி கங்கைகொண்ட சோழபுரத்தில் முதலாம் ராஜேந்திர சோழனின் 1000-வது பிறந்தநாள் விழா கொண்டாட்டத்திலும் கலந்து கொண்டு ரூ.4,800 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைத்தார்.

இந்த நிலையில், பிரதமர் மோடி  ஆகஸ்டு மாதம்  26-ந்தேதி மீண்டும் தமிழகம் வர உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி, அடுத்த  வரும்  26-ந்தேதி தமிழகம் வரும் பிரதமர் மோடி திருவண்ணாமலை மற்றும் சிதம்பரம் மாவட்டத்திற்கு செல்ல உள்ளதாகவும், அப்போத திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் மற்றும் சிதம்பரம் நடராஜரை தரிசிக்க இருப்பதாக கூறப்படுகிறது.

அத்துடன்,  சிதம்பரம் நடராஜன் கோவிலில் இருந்து மனதின் குரல் நிகழ்ச்சி மூலம் நேரலையில் நாட்டு மக்களுக்கு உரையாற்றஇருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதைத்தொடர்ந்து,  செப்டம்பர் மாத இறுதியிலும் பிரதமர் மோடி தமிழகம் வர உள்ளதாக கூறப்படுகிறது.

இந்தநிலையில், பிரதமரின் பயணம் குறித்த தகவல்கள் வெளியாகி உள்ளது.  ஆகஸ்ட் 26ம் தேதி மீண்டும் தமிழகம் வரும் பிரதமர் மோடி, திருவண்ணாமலை மற்றும் சிதம்பரத்தில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.  இந்தியாவில் உள்ள ஆன்மீக தலங்களில் முக்கியத்துவம் பெற்ற சிவன் ஸ்தலமான தமிழ்நாட்டில் உள்ள  திருவண்ணாமலை மற்றும் சிதம்பரம் கோவில்களில் பிரதமர் மோடி தரிசனம் செய்யவுள்ளார். மேலும், சிதம்பரம் நடராஜர் கோவிலில் இருந்தபடி, நாட்டு மக்களுக்கு மனதின் குரல் நிகழ்ச்சியில் நேரலையில் பிரதமர் மோடி உரையாற்றவுள்ளார்.