சென்னை: பாமக தலைவர் அன்புமணி பா.ம.க. கொடியை பயன்படுத்த தடை விதிக்க வேண்டும் என தமிழக டிஜிபி சங்கர் ஜிவாலிடம் பாமக நிறுவனர் ராமதாஸ் மனு அளித்துள்ளார். இது பாமகவில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.

பாமகவில் தந்தை மகனுக்கு இடையே ஏற்பட்டுள்ள மோதல் நாளுக்கு நாள் தீவிரமடைந்துள்ளது. இதற்கிடையில், அன்புமணி தான்தான் பாமக தலைவர் என்று கூறி வருவதுடன், பாமக நிர்வாகிகள் கூட்டத்தை கூட்டி, கட்சியை வழிநடத்தி வருகிறார். இதற்கு எதிராக பாமக நிறுவனர் ராமதாஸ் தனது ஆதரவாளர்களைக் கொண்டு தனி அணியாக செயல்பட்டு வருகிறார்.
இந்த நிலையில் அன்புமணி நாளை முதல் தமிழகம் முழுவதும் ‘‘உரிமை மீட்க… தலைமுறை காக்க’ நடைபயணம் ’ மேற்கொள்ள உள்ளார். 100 கிலோ மீட்டர் தூரத்துக்கு நடை பயணம் மேற்கொள்ளும் அன்புமணி, ஜுலை 25ஆம் நாள் திருப்போரூரில் தொடங்கி நவம்பர் 1ஆம் தேதி தருமபுரியில் நிறைவடையவுள்ளது.
இந்த நிலையில், பாட்டாளி மக்கள் கட்சியின் கொடியை அன்புமணி பயன்படுத்த பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். அன்புமணி பாட்டாளி மக்கள் கட்சியின் கொடியை பயன்படுத்துவதையும் நிர்வாகிகள் சந்திப்பதையும் தடுத்து நிறுத்த வேண்டும் என்றும் அன்புமணியின் உரிமை மீட்பு பயணத்திற்கு எதிராக டி.ஜி.பி.யிடம் ராமதாஸ் மனு அளித்துள்ளார்.
மேலும் கட்சியின் நிறுவனர் அனுமதியின்றி நடக்கும் அன்புமணியின் உரிமை மீட்பு பயணத்தை தடுத்து நிறுத்த வேண்டும் என்று மனுவில் கூறப்பட்டுள்ளது.
தமிழக மக்களின் உரிமையை மீட்க 100 நாள் நடைபயணம்! ஜூலை 25ந்தேதி தொடங்குகிறார் பாமக தலைவர் அன்புமணி…