டுதுறை

மிழக அமைச்சர் கோவி செழியன் இந்திய ரிசர்வ் வங்கிக்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.

நேற்று ஆடுதுறையில் தமிழக அமைச்சர் கோவி செழியன் செய்தியாளர்களிடம்.

 “ஆள தெரியாத பிரதமர் மோடி மத்திய இந்தியாவை ஆள வந்ததற்கு பிறகு பொருளாதார வீழ்ச்சி பெரிதளவில் ஏற்பட்டுள்ளது என்பது அனைவருக்கும் தெரியும், பொருளாதார வீழ்ச்சியை கட்டுப்படுத்த தெரியாத பிரதமர் பண மதிப்பீடு என்ற பெயரில் காகிதம் இல்லை, பணம் இல்லை டிஜிட்டல் பரிவர்த்தனை.

பின்னர் வருவதை முன்கூட்டியே அறிந்து அதனை வழி நடத்துவர் தான் அரசன் அப்படி எதைப் பற்றியும் சிந்திக்காமல் டிஜிட்டல் முறையை அறிமுகப்படுத்தி பின்னர் அதில் தோற்றவர்தான் பிரதமர் எனவும், பொருளாதாரத்தில் மந்த நிலையை உருவாக்கி சீரழித்தவர் மோடி

மத கலவரத்தை தூண்டுவது சிறுபான்மையினரை நசுக்குவது மத்திய அரசின் மூலம் மாநில அரசுகளின் உரிமைகளை தடுப்பது, தன் கட்சி ஆளாத மாநிலங்களில் ஆளுநரை விட்டு ஜனநாயகத்தை மீறுவது, உள்ளிட்ட பல்வேறு செயல்களில் ஈடுபட்டு வரும் பிரதமர் மோடி இன்று ஏழை எளிய மக்களின் வாழ்வாதாரத்தை சீரழிக்கும் வகையில் தங்க நகைகளை வங்கிகளில் அடகு வைப்பதற்கு பல்வேறு விதிமுறைகள் விதித்திருப்பது கண்டிக்கத்தக்கது.”

எனக் கூறி உள்ளார்.