கள்ளக்குறிச்சி
வரும் மே 15 அன்று கள்ளக்குறிச்சியில் நடந்த பள்ளிக் கலவரம் குறித்த விசாரணையில் ஆஜராக உத்தரவு இடப்பட்டுள்ளது.

கடந்த 2022 ஆம் ஆண்டு ஜூலை 13 ஆம் தேதி கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகில் உள்ள கனியாமூர் தனியார் பள்ளி விடுதியில் தங்கி பிளஸ்-2 படித்து வந்த மாணவி ஸ்ரீமதி மர்மமான முறையில் உயிரிழந்தார். இந்த மாணவியின் மரணத்துக்கு நீதி கேட்டு பல்வேறு அமைப்புகளை சேர்ந்த இளைஞர்கள் நடத்திய போராட்டம் கலவரமாக மாறி வன்முறையில் முடிந்தது.
இந்த தனியார் பள்ளி கலவரம் தொடர்பாக இறந்த மாணவியின் தாய் செல்வி, விசிக கடலூர் மாவட்ட செயலாளர் திராவிடமணி உள்பட 615 பேர் மீது கள்ளக்குறிச்சி சிறப்பு புலனாய்வு குழு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
வரும் மே 15 அன்று இந்த வழக்கு விசாரணைக்கு வருகிறது. இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 615 பேரும் கள்ளக்குறிச்சி குற்றவியல் நீதிதுறை நடுவர் எண்-2ல் ஆஜராக நீதிபதி ரீனா உத்தரவிட்டுள்ளார். ஒரு வழக்கில் ஒரே நேரத்தில் 615 பேர், வரலாற்றில் முதல் முறையாக ஆஜராக உள்ளனர்.