சென்னை

சென்னை நகரில் குளிரூட்டப்பட்ட மின்சார ரயில் சேவை அதிகரிக்கப்பட உள்ளது/

 

நாள்தோறும் சென்னை ரயில்வே கோட்டத்தில் 600-க்கும் மேற்பட்ட மின்சார ரயில் சேவைகள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்தநிலையில், கோடை வெயிலை சமாளிக்க ஏ.சி. வசதி கொண்ட மின்சார ரயில்களை இயக்க வேண்டுமென தெற்கு ரயில்வேக்கு பயணிகள் கோரிக்கை வைத்ததை ஏற்று பெரம்பூர் ரயில் பெட்டி தொழிற்சாலையில் ஏ.சி. வசதி கொண்ட மின்சார ரயில் தயாரிப்பு பணி கடந்த ஆண்டு தொடங்கியது.

இந்த பணிகள் கடந்த ஜனவரி மாதம் பணிகள் முடிந்து மார்ச் மாதம் சோதனை ஓட்டம் நடத்தப்பட்டுஅதில் திருப்தி ஏற்பட்டதால் ஏ.சி. மின்சார ரெயில் ஏப்.19-ம் தேதி முதல் பொதுமக்களின் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டது.

இந்த சேவை சென்னை கடற்கரை-செங்கல்பட்டு வழித்தடத்தில் ஏ.சி. தொடங்கியது. மொத்தம் 12 பெட்டிகள் கொண்ட இந்த ரயிலில் 1,116 பேர் அமர்ந்தும், 3,796 பேர் நின்று செல்லும் வகையிலும் தயாரிக்கப்பட்டுள்ளது. சென்னை கோட்டை, பூங்கா, எழும்பூர் மாம்பலம், கிண்டி, பரங்கிமலை, திரிசூலம், தாம்பரம், பெருங்களத்தூர், கூடுவாஞ்சேரி, சிங்கப்பெருமாள் கோவில், பரனூர் ஆகிய ரயில் நிலையங்களில்  இந்த ரயில் நின்று செல்கிறது.

மேலும் இந்த ரெயிலில் தானியங்கி கதவுகள், கண்காணிப்பு கேமரா, பயணிகள் தகவல் அமைப்பு உள்ளிட்டவை அமைக்கப்பட்டுள்ளன. ஞாயிற்றுக்கிழமை தவிர வாரத்தில் 6 நாள்களும் இந்த இயக்கப்படுகிறது. மேலும் சென்னை கடற்கரை – தாம்பரம் இடையே வழக்கமாக இயக்கப்படும் மின்சார ரயில் பாதையிலும் ஏசி மின்சார ரயில் இயக்கப்படுகிறது.

இந்த ரயில் இனி தினசரி இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது

 

தெற்கு ரயில்வே நிர்வாகத்துகு  பயணிகள் அளித்த கருத்துகளின் அடிப்படையில், ரயில்களின் சேவை அதிகரிக்கப்பட்டு ரயில்கள் இயக்கப்படும் நேரமும் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. அதன்படி,மே 2 ஆம் தேதி சென்னை புறநகர் ஏசி ரயில் சேவை 3-ல் இருந்து 8 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது  மேலும் மே 2 முதல் 19 ஆம் தேதி வரை புறநகர் ஏசி ரயில் திரிசூலம் ரெயில் நிலையத்தில் நிற்காது. மே 20 முதல் நின்று செல்லும்.