சென்னை: 100 நாள் வேலை வாய்ப்பு நிதி மறுப்பு: மத்திய அரசை கண்டித்து மாநிலம் முழுவதும் திமுக போராட்டம் நடைபெற்றது.

100நாள் வேலை திட்டமடான, மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு திட்டத்திற்காக தமிழ்நாட்டுக்கு தரவேண்டிய ”ரூ.4034 கோடி நிதியை வழங்காமல் மத்தியஅரசு தமிழ்நாட்டை வஞ்சித்து வருகிறது. இதை கண்டித்து, திமுக சார்பில் இன்று மாநிலம் முழுவதும் போராட்டம் நடைபெற்று வருகிறது.
திமுக சார்பிலான ஆர்ப்பாட்டத்தில் கடப்பாரை, மண்வெட்டியுடன் பெண்கள் கண்டன முழக்கம் எழுப்பினர்.
இந்த போராட்டத்தில் திமுக அமைச்ச்ரகள் துரைமுருகன், டி.ஆர்.பாலு, ஆர்.எஸ்.பாரதி மற்றும் முக்கிய தலைவர்கள உள்பட திமுக நிர்வாககள் கலந்து கொண்டனர்.
Patrikai.com official YouTube Channel