சென்னை: டெக்னிக்கல் ஃபால்ட்  கார்ணமாக  மெட்ரோ ரயிலில் வாட்ஸ்அப் டிக்கெட் Bot தற்காலிகமாக வேலை செய்யவில்லை என அறிவித்துள்ள மெட்ரோ ரயில் நிர்வாகம் மாற்று முறையில் டிக்கெட் பெற்றுக்கொள்ள பயணிகளை அறிவுறுத்தி உள்ளது.

சென்னை மக்களின் பெரும் வரவற்பை பெற்றுள்ள மெட்ரோ ரயிலில்  தினமும்  பல லட்சம் பேர்  பயணம் செய்து வருகிறார்கள்.  எந்தவித போக்குவரத்து இடையூறு இன்றி விரைவாக செல்வதால், மெட்ரோ ரயிலில்,  நாளுக்கு நாள் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.  மேலும் பயணிகள் சிரமமின்றி டிக்கெட் எடுப்பது உள்பட பல்வேறு வசதிகளை அவ்வப்போது மெட்ரோ ரயில் நிர்வாகம் செய்து வருகிறது.  மேலும்,  மெட்ரோ ரெயிலில் பயணிகள் எளிதாக செல்ல பல்வேறு வசதிகள் செய்யப்பட்டு உள்ளன. இதனால் நாளுக்கு நாள் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

இந்த நிலையில், இன்று “தொழில்நுட்பக் கோளாறு காரணமாக, சென்னை மெட்ரோ ரெயில் வாட்ஸ்அப் டிக்கெட் Bot தற்காலிகமாக வேலை செய்யவில்லை. பிற ஆன்லைன் தளங்கள் மூலம் மெட்ரோ டிக்கெட்டுகளைப் பெறுமாறு பயணிகளைக் கேட்டுக் கொள்கிறோம். உங்களுக்கு ஏற்பட்ட சிரமத்திற்கு வருந்துகிறோம்” மெட்ரோ ரெயில் நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது.