மயிலாடுதுறை;  மயிலாடுதுறை மாவட்டத்தில் ஓய்வுபெற்ற ஆசிரியை ஒருவரை,  சுமார் 25 வயது இளைஞர் ஒருவர் சாலையில் வைத்து சரமாரியாக கத்தியால் குத்திய சம்பவம் பெரும் பரபரப்பை எற்படுத்தி உள்ளது.

சுமார் 62 வயதுடைய ஓய்வு பெற்ற ஆசிரியரை, சுமார் 25 வயது மதிக்கத்தக்க உள்ள இளைஞர் ஒருவரை, சாலையில் வைத்து,  சரமாரியாக கத்தியால் குத்தினார்.  கிட்டதிட்ட  25 இடத்தில்  இந்த முதிய பெண் ஆசிரியரை கத்தியால் குத்தி  இருப்பதாக கூறப்படுகிறது.

இந்த சம்பவம் மயிலாடுதுறையில் உள்ள மதுரா நகரில்  நடைபெற்றுள்ளது.  62 வயதுடைய முன்னாள் ஆசிரியரை 25 இடத்தில் கத்தியால் குத்திய 25 வயது இளைஞர் எதிரெதிர் வீட்டினர் இடையே ஏற்பட்ட மோதல் காரணமாக கத்திக்குத்து நடைபெற்றுள்ளது. விசாரணையில்,  இருவருக்கும் இடையே நிலத்தகராறு இருந்து வந்ததாகவும், இருவரும் ஒரே தெருவில் எதிரெதிர்வீடுகளில் குடியிருந்து வந்ததும் தெரிய வந்துள்ளது.