ஆனந்த விகடன் மீதான தடையை நீக்க மத்திய அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறிய இந்தியர்களை கை கால்களில் விலங்கிட்டு விமானத்தில் அழைத்து வந்த விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இதுகுறித்து பல அரசியல் கட்சிகளும் கேள்வியெழுப்பிய நிலையில், தனது அமெரிக்க பயணத்தின் போது அதிபர் டிரம்பிடம் இதுகுறித்து எந்த ஓரு ஆட்சேபணையும் தெரிவிக்காமல் பிரதமர் மோடி நாடு திரும்பியதாகக் கூறப்படுகிறது.

இந்த விவகாரம் தொடர்பாக, பிரதமர் மோடி மற்றும் அமெரிக்க அதிபர் டிரம்ப் ஆகியோர் குறித்த கேலிச்சித்திரம் ஒன்றை ஆனந்த விகடன் வெளியிட்டது.

விகடனில் வெளியான இந்த கார்ட்டூன் மீது நடவடிக்கை எடுத்த மத்திய அரசு அந்த பத்திரிக்கையின் சமூக வலைதள பக்கங்களை முடக்கியது.

இது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்ட நிலையில், இந்த வழக்கை விசாரித்த நீதிபதி பரத சக்கரவர்த்தி கார்ட்டூன் தொடர்பாக விகடன் பத்திரிக்கையின் இணையதள முடக்கத்தை நீக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார்.