திண்டுக்கல்:  அரசு வேலை வாங்கி தருவதாக கூறி ஏமாற்றிய திமுக பிரமுகர்மீது  சட்ட நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி கைம்பெண் ஒருவர் தனது இரு சிறு பெண் குழந்தைகளுடன் காவல்நிலையம் முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

அரசு ரேசன் கடையில் வேலை வாங்கி தருவதாக கூறிய தன்னிடம் மோசடி செய்துவிட்டதாக,  தி.மு.க. பிரமுகர் மீது குற்றம் சாட்டி, அவர்மீது  சட்ட நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி கைம்பெண் ஒருவர் தனது இரு சிறு பெண் குழந்தைகளுடன் காவல்நிலையம் முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்.

திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை அருகே வெள்ளப் பொம்மன்பட்டியை சேர்ந்தவர் கருப்புச்சாமி. இவரது மனைவி வேலுமணி (வயது 30). இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு கருப்பச்சாமி விபத்தில் இறந்து விட்டார்.

இந்த நிலையில் வேலுமணி லாரி புக்கிங் ஆபீசில் வேலை செய்து தனது குடும்பத்தை கவனித்து வருகிறார்.  கைம்பெண்ணான அவர் அரசு வேலை கிடைத்தால் வாழ்க்கை மேம்படுமே என்ற எண்ணத்தில் ஏதாவது வேலை கிடைக்குமா என தெரிந்தவர்களிடம் கேட்டுக்கொள்ளார். அதைத்தொடர்ந்து,  அந்த பகுதி திமுகவினர் சிலரின் ஆலோசனை யின் போரில்,   திண்டுக்கல் நந்தவனப்பட்டியைச் சேர்ந்த தி.மு.க. பிரமுகர் இளங்கோ என்பரை சந்தித்து, தனது நிலையை எடுத்துக்கூறி ஏதாவது வேலை வாங்கி தரும்படி கோரியிருக்கிறார்.

இதையடுத்து,  வேலுமணிக்கு, ரேசன் கடையில் வேலை வாங்கி தருகிறேன் என்று கூறி, ரூ.1 லட்சம் பணம் கேட்டுள்ளார். இதையடுத்து அந்த கைம்பெண்ணும் தான் கஷ்டப்பட்டு சம்பாதித்து வைத்திருந்த  பணம் மற்றும் நகையை விற்று கடந்த 2023ம் ஆண்டு  ரூ.1 லட்சம் கொண்டு வந்து இளங்கோவிடம் கொடுத்துள்ளார். ஆனால், திமுக பிரமுகரான இளங்கோ, வாக்களித்தபடி அந்த பெண்ணுக்கு இதுவரை எந்தவோரு  வேலையும் வாங்கி கொடுக்கவில்லை என கூறப்படுகிறது. இதுதொடர்பாக அந்த பெண்ணும் கடந்த இரு ஆண்டுகளாக அவரை சந்தித்து கேட்டும்,  இப்போ வாங்கி தாரேன், அப்போ வாங்கித் தாரேன் என கூறி  ஏமாற்றி வந்துள்ளார்.

இது குறித்து பாதிக்கப்பட்ட  பெண்ணா வேலுமணி, திண்டுக்கல் மாவட்ட எஸ்.பி. அலுவலகத்தில்  புகார் அளித்தார். எஸ்.பி. உத்தரவின் பேரில் வடமதுரை போலீசார் தி.மு.க. பிரமுகர் இளங்கோ மீது வழக்கு பதிவு செய்து அவரை தேடி வருவதாக கூறினார்.

ஆனால், தன்புகார்மீது காவல்துறையினர் எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கவில்லை, என்றும், தன்னிடம் பணம் வாங்கி ஏமாற்றிய இளங்கோவை கைது செய்யாமல் போலீசார் அலைக்கழிப்பதாகவும், இதனால் தனக்கு கடும் மனஉளைச்சல் ஏற்பட்டுள்ளதாகவும் கூறியதுடன், தனது இரு பெண் குழந்தைகளுடன், வடமதுரை போலீஸ் நிலையம் முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். இது பரபரப்பை ஏற்படுத்திய,

இதனால் பதற்றம் அடைந்த போலீசார் அந்த கைப்பெண்ணிடம்  பேச்சுவார்த்தை நடத்தி விரைவில் பணத்தை பெற்றுத்தர நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். ஆனால், அந்த பெண், இதுபோல பல முறை சொல்லியிருக்கிறீர்கள், ஆனால்  ஏதும் செய்யவில்லை என கூறி அவர் செல்லாமல் போராட்டத்தில் தொடர்ந்து  ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.