சென்னை: வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் அரசு வழங்கும் உதவித் தொகைக்கு விண்ணப்பிக்கலாம் என தமிழ்நாடு அரசு அறிவிப்பு வெளியிட்ட உள்ளது. அத்துடன் யார் யார் இந்த உதவித்தொகை பெற முடியும் என்ற வழிகாட்டுதல் நெறிமுறைகளையும் வெளியிட்டு உள்ளது.
தமிழ்நாடு அரசு. வேலை வாய்ப்பற்ற இளைஞர்களுக்கு மாதாந்திர உதவித் தொகை வழங்கி வருகிறது. இந்த உதவித் தொகையை பெற சில நிபந்தனைகள் உள்ளன. அதனப்டி தகுதியானர்களுக்கு உதவித் தொகை வழங்கபட்டு வருகிறது.
இது குறித்து தமிழ்நாடுஅரசு வெளியிட்டிருக்கும் அறிவிப்பில், வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து 31.12.2004 அன்றைய தேதியில் ஐந்து வருடம் முடிவடைந்த, முறையாக பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு பயின்று பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெறாத மற்றும் பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்று, மேல்நிலை வகுப்பு (+2), பட்டப்படிப்பு தேர்ச்சி பெற்ற பதிவுதாரர் கள் இந்த உதவித்தொகை பெற தகுதி உடையவர் ஆவர்.
மாற்றுத்திறனாளிகளைப் பொறுத்தவரை, எழுதப்படிக்க தெரிந்தவர் முதல் பத்தாம் வகுப்பு, மேல்நிலை வகுப்பு (+2) மற்றும் பட்டப்படிப்பு தேர்ச்சி பெற்று பதிவு செய்து 11.12.324 அன்றைய தேதியில் ஓராண்டு முடிவடைந்த பதிவுதாரர்கள் தகுதி உடையவர் ஆவர். மாற்றுத்திறனாளிகளுக்கு வருமான உச்ச வரம்பு மற்றும் வயது வரம்பு ஏதுமில்லை.
ஆதிதிராவிட மற்றும் பழங்குடியின பிரிவின் 45 வயதுக்குள்ளும், இதர பிரிவினர் 40 வயதுக்குள்ளும் இருக்க வேண்டும். அதிகபட்ச குடும்ப ஆண்டு வருமானம் ரூ.72,000/-க்கு மிகாமல் இருக்க வேண்டும்.
அரசின் முதியோர் உதவித்தொகை (CAP) பெறுபவர்களாயின், அவர்களுக்கு வேலைவாய்ப்பற்றோர். உதவித்தொகை பெற தகுதியில்லை.
பயன்தாரர் எந்த ஒரு கல்வி நிறுவனத்திலும் பயிலுபவராக இருக்கக்கூடாது.
இத்தகுதிகளை உள்ளடக்கிய பதிவுதாரர்களுக்கு, தமிழக அரசால் கீழ்க்கண்டவாறு உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது.
பந்தாம் வகுப்பு தேர்ச்சியின்மை(SSLC-Failed) – ரூ. 200
பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு( SSLC-Passed) – ரூ.300
பன்னிரண்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு(HSC-Passed} – ரூ.400
பட்டப்படிப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு(DEGREE-Passed) – ரூ.600
அனைத்து வகை மாற்றுத் திறனாளிகள் :
எழுதப்படிக்க தெரிந்த மற்றும் பத்தாம் வகுப்புதேர்ச்சி பெற்றவர்களுக்கு – ரூ.600
பன்னிரண்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு(HSC-Passed} – ரூ.750
பட்டப்படிப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு(DEGREE-Passed) – ரூ.1000
(சிறப்பு நேர்வாக மாற்றுத்திறனாளி பிரிவினருக்கு மாதாந்தோறும் உதவித்தொகை வழங்கப்படுகிறது.)
மேற்குறிப்பிட்ட தகுதியுடைய பதிவுதாரர்கள், வேலைவாய்ப்பு அலுவலக அடையாள அட்டை, அசல் பள்ளி/கல்லூரி மாற்றுச் சான்றிதழ் மற்றும் அசல் குடும்பஅட்டை ஆகியவற்றுடன் நேரில் வருகைபுரிந்து, விண்ணப்பப்படிவத்தை வசிக்கும் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டுதல் மையத்தில் இலவசமாக பெற்று பயன்பெறலாம்.
விண்ணப்பதாரர் அரசு துறை/தனியார் துறையிலும் எவ்வித ஊதியம் பெறும் பணியிலோ அல்லது சுயதொழில் வேலைவாய்ப்பில் ஈடுபட்டவராகவோ இருத்தல் கூடாது.
ஏற்கனவே மூன்றாண்டுகள் உதவித்தொகை பெற்றவர் மற்றும் பொறியியல், மருத்துவம், விவசாயம் மற்றும் சட்டம் போன்ற தொழிற்கல்வி, பட்டப் படிப்புகள் முடித்தர்களுக்கு வேலைவாய்ப்பற்ற உதவித்தொகை பெற தகுதியில்லை .
இவ்வாறு அதில் தெரிவிக்கப்படுகிறது.