சென்னை: உலக புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தனது மகன் இன்பதியுடன் வந்து தொடங்கி வைத்தார் .
தமிழர்களின் பாரம்பரிய பண்டிகையான பொங்கல் பண்டிகையையொட்டி, தென்மாவட்டங்களில் ஜல்லிக்கட்டு போட்டி, மஞ்சு விரட்டு உள்பட தமிழர்களின் வீரத்தை பறைசாற்றும் பாரம்பரிய விளையாட்டுக்கள் நடைபெறுவது வழக்கம். அதன்படி, நடப்பாண்டு ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெற்ற வருகின்றன.
ஏற்கனவே மதுரை மாவட்டத்தில் நடைபெறும் உலகப்புகழ்பெற்ற அவனியாபுரம், பாலமேடு பகுதிகளில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெற்ற நிலையில், இன்று உலகப்புகழ் பெற்ற அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு போட்டிகள் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்த போட்டியினை இன்று காலை 7 மணியளவில் போட்டியை தமிழக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கொடியசைத்து தொடங்கி வைத்தார். இதைத் தொடர்ந்து, அலங்காநல்லூர் கோயில் காளைகளுக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு, ஒன்றன்பின் ஒன்றாக அவிழ்த்துவிடப்பட்டு வருகின்றன. தொடர்ந்து, போட்டியாளர்களின் காளைகள் வாடிவாசல் வழியாக அவிழ்த்துவிடும்.
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் 1,000 காளைகளும், 500 மாடுபிடி வீரர்களும் களம் காண்கின்றனர். சிகிச்சை அளிக்க 200 மருத்துவர்கள், 60 கால்நடை மருத்துவர்கள், செவிலியர்கள் தயார் நிலையில் உள்ளனர். அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் 2,000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
இதற்காக அலங்காநல்லூரில் வாடிவாசல் அமைத்தல், சிறப்பு விருந்தினர்கள், பார்வையாளர்கள் அமர்ந்து பார்க்க அரங்கம் அமைத்தல் உள்ளிட்ட பல்வேறு முன்னேற்பாட்டுப் பணிகளை மதுரை மாவட்ட நிர்வாகமும், விழாக் குழுவினரும் கடந்த சில நாள்களாக மேற்கொண்டனர்.
இந்தப் போட்டியில் தமிழகம் முழுவதிலும் இருந்து ஜல்லிக்கட்டு காளைகள் பங்கேற்கின்றன. பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் தொடங்கிய ஜல்லிக்கட்டு போட்டியை காண நேற்று இரவு முதல் பார்வையாளர்கள் வருகை தந்துள்ளனர்.