சென்னை: மதுரை- சிவகங்கை இடையே  ரூ.342 கோடி முதலீட்டில் 775 ஏக்கர் பரப்பளவில் ‘சிப்காட்’  தொழிற்பூங்கா அமைக்கப்படும் என தமிழ்நாடு அரசு அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.

அதன்படி,  மதுரை- சிவகங்கை மாவட்டம் இடையே இலுப்பைக்குடியில் 775 ஏக்கர் பரப்பளவில் இரண்டாவது புதிய சிப்காட் தொழிற்பூங்கா ரூ.342 கோடி முதலீட்டில் அடுத்த ஆண்டு தொடங்கபட உள்ளது என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

2030-க்குள் மாநிலத்தின் மொத்த உள்நாட்டு உற்பத்தியை 1 டிரில்லியன் டாலர் அளவுக்கு உயர்த்த  இலக்கு நிர்ணயம் செய்து தமிழ்நாடு அரசு செயலாற்றி வருகிறது.  மேலும்  மாநிலத்தில் வேலையில்லா திண்டாட்டத்தை ஒழிக்கும் வகையில்,   அனைத்து பட்டதாரிகளுக்கும் வேலைவாய்ப்பு உருவாக்கும் முயற்சிகளையும் மேற்கொண்டு வருகிறது. இதைத்தொடர்ந்து,  மாநிலம் முழுவதும் தொழிற்வளர்ச்சியை முன்னெடுக்கும் முயற்சியில் தீவிரமாக செயலாற்றி வருகிறது. அதற்காக சென்னை உள்பட பல நகரங்களில் தொழிற்பூங்காங்களை உருவாக்குவதற்குவதுடன், தொழிலதிபர்களும் அழைப்பு விடுத்து வருகிறது. அதன்படி இந்தியா மட்டுமின்றி வெளிநாடுகளுக்கும் சென்று  தொழில் முதலீட்டார்களை சந்தித்து, தமிழ்நாட்டில் தொழில் தொடங்க முதல்வர் ஸ்டாலின் அழைப்பு விடுத்து வருகிறது.

இந்த நிலையில், தொழிற்சாலைகள் அதிகம்  வளர்ச்சியடையாத சிவகங்கை மாவட்டத்தில் பொருளாதார வளர்ச்சியைத் மேம்படுத்த புதிய தொழிற்பூங்கா அமைக்க முடிவு செய்துள்ளது. அதனப்டி, அங்கு, அதாவத,  மதுரை -சிவகங்கை மாவட்டத்திற்கு இடையே இலுப்பைக்குடி, கிளத்தாரி மற்றும் அரசனூர் கிராமங்களை உள்ளடக்கிய 775 ஏக்கர் பரப்பளவில் பெரிய அளவிலான தொழில் பூங்காவை நிறுவ சிப்காட் திட்டமிட்டுள்ளது. ரூ.342 கோடி முதலீட்டில் இந்த சிப்காட்தொழிற் பூங்காவை அமைக்கப்பட உள்ளது.

இது உலகத்தரம் வாய்ந்த கட்டமைப்பு மற்றும் வசதிகளை உருவாக்கப் பயன்படுத்தப்படும் என்று தெரிவித்துள்ள தமிழ்நாடு அரசு,  இந்த சிப்காட் மதுரை – சிவகங்கை மாவட்டங்களுக்கு மத்தியில் அமைய உள்ள காரணத்தல் இரு மாவட்டத்திற்கும் பலன் அளிக்கும்  என்று கூறியுள்ளது.

ஏற்கனவே மதுரையில் ELCOT ஐடி பார்க் செயல்படுத்தப்பட்டு வரும் வேளையில், தொழிற்துறைக்கான இந்த புதிய திட்டம் மதுரை – சிவகங்கை மாவட்டத்தில் புதிய மாற்றத்தை உருவாக்கும். இந்த தொழில் பூங்காவில் சுமார் 36,500 வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படுவதாகும். இந்த தொழிற்பூங்கா, ஆட்டோமொபைல் ஸ்பேர் பார்ட்ஸ் மற்றும் டெக்ஸ்டைல் போன்ற முக்கிய துறைகளில் கவனம் செலுத்தும். மேலும், இப்புதிய சிப்காட் தொழிற்பூங்காவின் வளர்ச்சி லாஜிஸ்டிக்ஸ், பேக்கேஜிங் மற்றும் கிடங்கு உள்ளிட்ட துணைத் தொழில்களின் வளர்ச்சியையும் தூண்டும்.இந்த புதிய சிப்காட் தொழில் பூங்கா அடுத்த ஆண்டு திறக்கப்பட உள்ளது.