சென்னை:   தூத்துக்குடி-மதுரை புதிய ரயில் பாதை தேவையில்லை என தமிழக அரசுதான்  கடிதம் எழுதியது, அதனால்தான் அந்த ரயில்பாதை திட்டம் கைவிடப்பட்டது என என சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் தெரிவித்து உள்ளது.

தூத்துக்குடியில் இருந்து அருப்புக்கோட்டை வழியாக மதுரைக்கு புதிதாக ரயில் பாதை அமைக்கும் திட்டத்தை வேண்டாம் எனக் கூறி தமிழக அரசிடம் இருந்து எழுத்துபூர்வமான கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. இதனால் அத்திட்டத்தை மத்திய அரசு முழுமையாக கைவிட்டது என மத்திய ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.

சென்னை ஐசிஎஃப்-ல் தயாரிக்கப்பட்டு வரும் அமிர்த பாரத் 2.0 படுக்கை வசதி கொண்ட ரயில் பெட்டிகளை மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் ஆய்வு செய்தார். அதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், ‘நாடு முழுவதும் ரயில் போக்குவரத்தை மேம்படுத்த மத்திய அரசு சார்பில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. அந்த வகையில் தமிழகத்துக்கு ரயில்வே துறை சார்பில் செயல்படுத்தப்படும் புதிய திட்டங்களுக்கு மாநில அரசு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.

தூத்துக்குடியில் இருந்து அருப்புக்கோட்டை வழியாக மதுரைக்கு புதிதாக ரயில் பாதை அமைக்கும் பணிகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில், இத்திட்டத்தை வேண்டாம் எனக் கூறி தமிழக அரசிடம் இருந்து எழுத்துபூர்வமான கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. இதன் காரணத்தால் இத்திட்டத்தை மத்திய அரசு முழுமையாக கைவிட்டது. தமிழ்நாடு அரசு ஒத்துழைப்பு தராததால் தான் மதுரை மற்றும் தூத்துக்குடி இடையிலான புதிய ரயில் பாதை அமைக்கும் திட்டம் கைவிடப்பட்டதாக மத்திய ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.

கடந்த ஆகஸ்ட் 2024இல் தான் தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் அருப்புக்கோட்டை வழியே மதுரை தூத்துக்குடி இடையே ரயில் பாதை அமைப்பது உள்ளிட்ட புதிய ரயில்வே திட்டங்களுக்காக நிதி ஒதுக்கீடு செய்யும் படி மத்திய அரசுக்கு கடிதம் மூலம் கேட்டிருந்தார். ஆனால் தமிழ்நாடு அரசே இந்த திட்டத்தை செயல்படுத்த முன் வரவில்லை, மாநில அரசு வேண்டாம் என கூறியதாலே மதுரை தூத்துக்குடி இடையிலான புதிய ரயில் பாதை திட்டம் முழுமையாக கைவிடப்பட்டது என மத்திய அமைச்சர் தற்போது பதில் அளித்திருக்கிறார்.

நாடு முழுவதும் ரயில் போக்குவரத்தை மேம்படுத்த மத்திய அரசு சார்பாக பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன என குறிப்பிட்ட அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், தமிழகத்துக்கு ரயில்வே துறை சார்பில் செயல்படுத்தப்படும் புதிய திட்டங்களுக்கு மாநில அரசு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என கூறினார்.

திருவள்ளூர் அருகே 2024 அக்டோபரில் கவரப்பேட்டையில் ரயில் தடம் புரண்ட விபத்து தொடர்பாக கேட்ட போது, போல்ட்கள் அகற்றப்படாத வகையில் புதிய போல்ட் வடிவமைப்புகள் அறிமுகம் செய்யப் பட்டுள்ளது என கூறினார். இது பாதுகாப்பை மேம்படுத்தும் என்றும் அவர் உறுதி அளித்தார்.

ஏழை எளிய மக்களும் வந்தே பாரத் ரயில்களில் பயணிக்கும் அனுபவத்தை பெற வேண்டும் என்ற நோக்கத்திற்காக குறைந்த கட்டணத்தில் அம்ரித் பாரத் ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இதற்கு மக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்துவரும் நிலையில், தற்போது படுக்கை வசதி கொண்ட அம்ரித் ரயில் பெட்டிகள் தயாரிக்கப்பட்டு வருகின்றன. ஒவ்வொரு ரயில் பெட்டிகளும் தயாரிக்கப்பட்டு அனைத்து சோதனைகளும் நிறைவடைய குறைந்தபட்சம் மூன்று மாதங்களாவது ஆகும். அந்த வகையில் அடுத்த இரண்டு ஆண்டுகளில் 50 அம்ரித் ரயில்களை மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர திட்டமிட்டுள்ளோம்.

தமிழகத்தில் பாம்பன் பாலம் அமைக்கும் பணி முழுமையாக நிறைவு பெற்று சோதனை ஓட்டங்கள் நடைபெற்று வருகின்றன. விரைவில் அந்த பாலமும் திறந்து வைக்கப்படும்’.

இவ்வாறு கூறினார்.