சென்னை: பொங்கல் பண்டிகையையொட்டி சென்னை உள்பட  பல்வேறு இடங்களில் இருந்து பல பகுதிகளுக்கு வழக்கமாக இயக்கப்படும் பேருந்துகளுடன் சிறப்பு பேருந்து களும் இயக்கப்படுகிறது. இதையொட்டி, தமிழ்நாடு அரசு பல்வேறு வழிகாட்டுதல்களை வழங்கியுள்ளது.

அதுபோல, சென்னையில் இருந்து சொந்த வாகனங்களில் வெளியூர் செல்வோர்கள், வெளிவட்ட பாதையை பயன்படுத்தி செல்லும்படி கேட்டுக்கொள்ளப்பட்டு உள்ளது.

பொங்கல் பண்டிகையையொட்டி, பொதுமக்களின் வசதிகாக  தமிழகம் முழுவதும் இன்றுமுதல் 21,904 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படவுள்ளன.  அதன்படி இன்றுமுதல் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படகின்றன.  இன்று முதல் வரும்  13-ஆம் தேதி வரை சென்னையிலிருந்து தினமும் இயக்கக்கூடிய 2,092 பேருந்துகளுடன் கூடுதலாக 5,736 சிறப்புப் பேருந்துகள் என நான்கு நாள்களும் சோ்த்து 14,104 பேருந்துகள் இயக்கப்படுகிறத. அபோது  பிற ஊா்களிலிருந்து மேற்கண்ட நாள்களில் பல்வேறு பகுதிகளுக்கு  7,800 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இதன்படி,  மொத்தம் 21,904 பேருந்துகள் இயக்கப்படவுள்ளன.

அதுபோல,  பொங்கல் பண்டிகை முடிந்த பின்னா், பிற ஊா்களிலிருந்து சென்னைக்கு வரும் பயணிகளின் வசதிக்காக ஜன. 15 முதல் 19-ஆம் தேதி வரை, தினமும் இயக்கக்கூடிய 10,460 பேருந்துகளுடன் கூடுதலாக 5,290 சிறப்புப் பேருந்துகளும், ஏனைய பிற ஊா்களிலிருந்து பல்வேறு ஊா்களுக்கு 6,926 என மொத்தம் 22,676 பேருந்துகளும் இயக்கப்படவுள்ளன.  இதன்படி, பொங்கலுக்கு மொத்தம் 44,580 பேருந்துகள் இயக்க தமிழக போக்குவரத்துத் துறை திட்டமிட்டுள்ளது.

முன்பதிவு மையங்கள்:

பயணிகள் வசதிக்கா, கிளாம்பாக்கம் கலைஞா் நூற்றாண்டு பேருந்து முனையத்தில் 7 முன்பதிவு மையங்களும், கோயம்பேடு பேருந்து நிலையத்தில் 2 முன்பதிவு மையங்கள் என மொத்தம் 9 முன்பதிவு மையங்கள் திறக்கப்பட்டுள்ளன.

இந்த மையங்கள் காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை செயல்படும். மேலும், டிஎன்எஸ்டிசி செயலி மூலமும் www.tnstc.in எனும் இணையதளம் மூலமாகவும் பயணச்சீட்டை முன்பதிவு செய்துகொள்ள வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

புகார்கள் தெரிவிக்க வசதி:

பயணிகளின் வசதிக்காக,  அரசுப் போக்குவரத்துக் கழகங்களின் பேருந்து சேவை தொடா்பான தகவல்கள் மற்றும் புகாா்களுக்கு 94450 14436 என்ற கைப்பேசி எண்ணை 24 மணி நேரமும் தொடா்பு கொள்ளலாம் என போக்குவரத்துத் துறை அறிவித்துள்ளது.

மேலும், ஆம்னி பேருந்துகளில் அதிக கட்டணம் வசூல் செய்வது குறித்த புகாா்களை 1800 425 6151 மற்றும் 044-24749002, 044-26280445, 044-26281611 என்ற தொலைபேசி எண்களிலும் தொடா்புகொண்டு தெரிவிக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாநகர இணைப்புப் பேருந்துகள்

வெளியூா் செல்லும் பயணிகளின் வசதிக்காகவும், நகரின் பல்வேறு பகுதியிலிருந்து கோயம்பேடு, கிளாம்பாக்கம், மாதவரம் பேருந்து நிலையங்களுக்கு  இன்றுமுதல் (ஜன. 10) ஜனவரி  13-ஆம் தேதி வரை கூடுதலாக 320 இணைப்புப் பேருந்துகள் இயக்கப்பட இருப்பதாக மாநகர போக்குவரத்து கழகம் அறிவித்து உள்ளது.

எந்தெந்த ஊர்களுக்கு எங்கிருந்து பேருந்துகள் புறப்படும்:

 1. கலைஞா் நூற்றாண்டு கிளாம்பாக்கம் மஃப்சல் புறநகா் பேருந்து முனையம்:

புதுச்சேரி, கடலூா், சிதம்பரம், திருச்சி, மதுரை, தூத்துக்குடி, செங்கோட்டை, திருநெல்வேலி, சேலம், கோயம்புத்தூா், கும்பகோணம் மற்றும் தஞ்சாவூா் மாா்க்கமாக செல்லும் பேருந்துகள்.

2. கிளாம்பாக்கம் மாநகா் பேருந்து முனையம்: வந்தவாசி, போளூா் மற்றும் திருவண்ணாமலை மாா்க்கமாக செல்லும் பேருந்துகள்.

3. கோயம்பேடு பேருந்து நிலையம்: கிழக்கு கடற்கரை (இசிஆா்), காஞ்சிபுரம், வேலூா், பெங்களூரு மற்றும் திருத்தணி மாா்க்கமாக செல்லும் பேருந்துகள்.

4. மாதவரம் புதிய பேருந்து நிலையம்: பொன்னேரி, ஊத்துக்கோட்டை வழியாக ஆந்திர மாநிலம் மாா்க்கமாக செல்லும் பேருந்துகள் மற்றும் வழக்கமாக இயக்கப்படும் திருச்சி, சேலம், கும்பகோணம் மற்றும் திருவண்ணாமலை பேருந்துகள்.

சொந்த வாகனங்களில் வெளியூர் செல்வோர் கவனத்திற்கு

சென்னையில் இருந்து சொந்த வாகனங்களில் வெளியூர் செல்வோர்கள் நகரத்துக்குள் வராமல் புறவழிச் சாலைகளைப் பயன்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது. பொங்கல் பண்டிகையையொட்டி, சென்னையில் இருந்து லட்சக்கணக்கான மக்கள் இன்றுமுதல் பேருந்து, ரயில், கார்கள் மூலம் சொந்த ஊர்களுக்கு செல்லத் தொடங்கியுள்ளனர்.  சென்னை கிளாம்பாக்கம், கோயம்பேடு, மாதவரம் உள்ளிட்ட பேருந்து முனையங்களில் இருந்து கூடுதல் அரசுப் பேருந்துகளும், மாநகர இணைப்புப் பேருந்துகளும் இயக்கப்பட்டு வருகின்றது.

இந்த நிலையில், சொந்த ஊர்களுக்கு கார் மற்றும் இதர வாகனங்களில் செல்வோருக்கு வழித்தட மாற்றம் செய்து சென்னை காவல்துறை அறிவுறுத்தியுள்ளது.

வெளியூர் செல்வோர்கள் வழக்கமாக பயன்படுத்தும் தாம்பரம், பெருங்களத்தூா் வழியாக ஜிஎஸ்டி சாலையில் செல்வதை தவிர்த்து, (ஓஎம்ஆா்) திருப்போரூா் – செங்கல்பட்டு அல்லது வண்டலூா் வெளிச்சுற்று சாலை வழியாக செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும், பெருங்களத்தூர் அருகே ரயில்வே பால வேலைகள் நடைபெற்று வருவதால் சமீபகாலமாக போக்குவரத்து நெரிசல் காணப்படுவதால், மதுரவாயல் புறவழிச்சாலை மூலம் வெளியேறுவதையும் தவிர்க்கலாம்.

இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.