சென்னை

ள்ளிகளில் அரையாண்டு விடுமுறையின் போது சிறப்பு வகுப்புகள் நடத்த அரசு தடை விதித்துள்ளது.

தமிழகத்தில் கடந்த 23 ஆம் தேதி பள்ளி மாணவ-மாணவிகளுக்கு அரையாண்டு தேர்வு நிறைவு பெற்று  24 ஆம் தேதி முதல் அரையாண்டு விடுமுறை விடப்பட்டது.  அரையாண்டு விடுமுறைக்கு பிறகு அடுத்த மாதம் (ஜனவரி) 2-ந்தேதி மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட இருக்கின்றன.

அரையாண்டு விடுமுரையின் போது சில தனியார் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள் ஒரு சில குறிப்பிட்ட வகுப்பு மாணவ-மாணவிகளுக்கு சிறப்பு வகுப்புகளை நடத்துவதாக புகார்கள் எழுந்துள்ளன. எனவே இதற்கு பள்ளிக்கல்வித் துறை கடும் எச்சரிக்கையை விடுத்துள்ளது.

அரையாண்டு விடுமுறை நாட்களில் சிறப்பு வகுப்புகள் நடத்தக் கூடாது. அவ்வாறு நடத்தும் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அதுதொடர்பான உத்தரவை முறையாக பின்பற்ற அனைத்து மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கும், கல்வித் துறை அறிவுறுத்தியியுள்ளது.