மேஷம்

அன்புள்ள உங்களுக்கு இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்.

சிலருக்குக் குழந்தைங்க  மூலம் சந்தோஷமும் பெருமிதமும் ஏற்படும். அரசாங்க வகை இலாபத்தால் மனம் மகிழ்ச்சி அடையும்.  புதிய நண்பர்கள் சேர்க்கையால் தொழிலில் இலாபம் ஏற்பட சான்ஸ் இருக்கு. வெளியில் தங்கும் சூழல் ஏற்படும். எடுத்த காரியத்தை செய்யும் போது எது சரி, எது தவறு என்று தடுமாற்றம் ஏற்பட்டாலும் திறமையால் அதனை செய்து முடிப்பீங்க. நல்லவங்களோ அட்வைஸ் இதுக்குப் பெருமளவு உதவியா இருக்கும். பணவரவு எதிர்பார்த்தபடி இருக்கும். தொழில் வியாபாரம் முன்னேற்ற பாதையில் செல்லும். நிதி உதவி கெடைக்கும். வாடிக்கையாளர் மத்தியில் மதிப்பு கூடும். ஆபீஸ்ல இருப்பவர்களுக்கு நீண்ட நாட்களாக எதிர்பார்த்துக் காத்துக்கிட்டிருந்த பதவி உயர்வு கட்டாயம் கெடைக்கும். அது மட்டுமில்லீங்க. சம்பள உயர்வும் அதோட கைகோர்த்துக்கிட்டு வரும். பொது நன்மையில் ஈடுபட்டு மகிழுவீங்க.

சந்திராஷ்டமம் : 2024 டிசம்பர் 27 முதல் டிசம்பர் 29 வரை

சந்திராஷ்டம தினங்களில் பேச்சிலும் செயலிலும் கவனமாக இருக்க வேண்டும்.

ரிஷபம்

அன்புள்ள உங்களுக்கு இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்.

பெண்கள் குடும்பத்தையும், வேலையையும் ஒருசேர பார்த்து சமாளிக்கத் திணற வேண்டிய சூழ்நிலை நிலவும். ஆயினும் ஒங்களோட திறமையால் சமாளிச்சுடுவீங்கமா. டோன்ட்டே ஒர்ரி. குழந்தைகள் நலமும் கணவர்/ மனைவியின் நலமும் அப்பாவின் நலமும் உங்களை உற்சாகமாகவும் சந்தோஷமாகவும் வைக்கும். குழந்தைங்க ஏதாச்சும் அவார்ட் அல்லது ரிவார்ட்  அல்லது பிரைஸ் வாங்கி வந்து ஒங்களை சந்தோஷப்படுத்துவாங்க. குடும்பத்தில் கல்யாணம் .. சீமந்தம்.. அறுபதாம் கல்யாணம்னு வரிசையா நல்ல நிகழ்வுகள் வரப் போகுது. ரெடியா இருந்துக்குங்க. குடும்பத்துல  மகிழ்ச்சி இருக்கும். கணவன் மனைவிக்கிடையே இதுவரை இருந்து வந்த கருத்து வேற்றுமை நீங்கி நெருக்கம் அதிகரிக்கும். பிள்ளைகளுக்கு தேவையான பொருட்களை வாங்கி கொடுப்பீங்க. பெண்களுக்கு மிக கவனமாக பேசுவதும், கோபத்தை குறைப்பதும் நன்மை தரும். எதிர்பார்த்த பணஉதவி கெடைக்கும்.

சந்திராஷ்டமம் : 2024 டிசம்பர் 29 முதல் 2025 ஜனவரி 1 வரை

சந்திராஷ்டம தினங்களில் பேச்சிலும் செயலிலும் கவனமாக இருக்க வேண்டும்.

மிதுனம்

அன்புள்ள உங்களுக்கு இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்.

சுப வார்த்தைகளைக் கேட்டு நல்ல குணங்களுக்கு மாற முயல்வீங்க. சிலருக்கு எப்போதும் பண விஷயமான சிந்தனைகள் எழும். அரசு அதிகாரிங்க தொல்லை தரலாம்.  செய்யும் தொழிலில் இலாபம் அதிகரிக்க பொருளாதாரம் சீராகும். நிலுவையில் உள்ள காரியங்கள் சிறப்பாக முடிய வழி பிறக்கும். வரவேண்டிய பணம் கைக்கு வந்து சேரும். இரவு பகலாக உழைக்க வேண்டி இருக்கும். அரசியல்வாதிகள் மக்கள் தொடர்பான பிரச்சினைகளை சந்திக்க நேரிடும். மக்கள் பிரச்சினைகளைத் தீர்த்து அவங்களோட ஆதரவைப் பெறுவீங்க. மாணவர்களுக்கு கல்வியில் எதிர்பார்த்த முன்னேற்றம் காணப்படும். எதிர்கால கல்வி பற்றிய சிந்தனை மேலோங்கும். இந்த வாரம் தந்தையின் உடல்நிலையில் முன்னேற்றம் காணப்படும். பூர்வீக சொத்துக்களில் இருந்த பிரச்சினைகளில் சாதகமான நிலை காணப்படும். அப்பா அம்மா கூட கட்டாயம் சண்டை போட மாட்டேன்னு சபதம் எடுத்துக்குங்க.

சந்திராஷ்டமம் : 2025 ஜனவரி 1 முதல் 2025 ஜனவரி 3 வரை

சந்திராஷ்டம தினங்களில் பேச்சிலும் செயலிலும் கவனமாக இருக்க வேண்டும்.

கடகம்

அன்புள்ள உங்களுக்கு இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்.

தந்தை வழி உறவுகளால் ஆதாயம் உண்டு.  குழந்தைகளின் முன்னேற்றம் மகிழ்ச்சி அளிக்கும்.  அரசாங்க வகை இலாபத்தால் மனம் மகிழ்ச்சி அடையும்.  புதிய நண்பர்கள் சேர்க்கையால் தொழிலில் இலாபம் ஏற்படலாம். உற்சாகத்தில், தன்னிலை மறந்து செயல்பட வேண்டாம். இந்த வாரத்தில் எந்த ஒரு வேலையும் அவசர அவசரமாக செய்ய வேண்டாம். நிதானமாய் யோசிச்சுச் செய்ய அவகாசம் இருக்கும்போது ஏன் அர்ஜென்ட் பண்ணிக்கணும்? பிறருக்காக ஜாமின் கையெழுத்து போடவே வேண்டவே வேண்டவே வேண்டாம். ஆபீஸ்ல கூடுதல் பணி சுமை ஏற்படும். ஒங்களோட வேலைகளை பிறரிடம் ஒப்படைக்கறதைத் தவிர்க்கவும். மத்தவங்க வேலையை இழுத்துப்போட்டுக்கிட்டோ.. அவங்க கெஞ்சறாங்களேன்னோ எடுத்துச் செய்யறதையும் அறவே தவிர்க்கணுங்க. வண்டி ஓட்டும்போது மொபைல்ல பேசிக்கிட்டே ஓட்டாதீங்க.

சிம்மம்

அன்புள்ள உங்களுக்கு இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்.

பல நாட்களாகச் சந்திக்காம .. பட்.. சந்திக்க விரும்பிய ஒரு நபரைச் சந்திக்க நேரலாம். கற்பனை வளம் பெருகும். சிலர் மனம் நண்பர்கள் சகவாசத்தால்  தீய வழி முறைகளை நாட வாய்ப்பிருக்குங்க. எனவே, கவனம் தேவை. அப்பிடிப்பட் ஃப்ரெண்ஸ்ஸைக் கட் பண்ணுங்க. அவங்க எதுக்கு நமக்கு? வருமானத்துக்குக் குறைவிருக்காது என்றாலும் செலவுகளும் அதிகரிக்கும். உறவினர்களுடன் இணக்கமான சூழ்நிலை உண்டாகும். உடல்நலம் சீராகும். வாழ்க்கைத் துணையின் ஆரோக்கியம் சற்று பாதிக்கப்படக்கூடும். சிலநேரங்களில் மனசுல குழப்பமான நிலை ஏற்படக்கூடும். டாடி மம்மி பற்றி இருந்து வந்த டென்ஷன்ஸ் அல்லது அவங்க கூட இருந்துக்கிட்டிருந்த பனிப் போர் ஒரு முற்றிப்புள்ளி வைச்சுக்கும். ஆபீஸ்ல மகிழ்ச்சியான சூழ்நிலையே காணப்படுகிறது. எதிர்பார்த்துக் காத்திருந்த பதவி உயர்வு அல்லது ஊதிய உயர்வு இந்த வாரம் கிடைப்பதற்கு வாய்ப்பு உள்ளது.

கன்னி

அன்புள்ள உங்களுக்கு இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்.

மனதுக்குப் பிரியமான நபராகப் பிற்காலத்தில் மாறப்போகிற ஒரு நபருடன் நட்பு ஏற்படும். வாழ்க்கைல இத்தனை காலமா சந்திக் ஏங்கிக்கிட்டிருநத் மனமகிழ்ச்சியையும், சுகானுபவங்கள், அடைவீங்க. இடைவிடாத கடின உழைப்பின் காரணமாக் காலா காலத்தில் சாப்பிடவும் தூங்கவும் கநேரம் இருக்காது. அட்ஜஸ்ட் பண்ணிக்குங்க. இதற்கு மிக அருமையான பலன் இருக்கப்போகுதுங்க. வணிகத்தில் முதலீடு செய்வதில் கூடுதல் கவனம் செலுத்துவீங்க. எனவே நோ பிராப்ளம். கல்யாணம் பற்றி அவசர முடிவு எடுக்க வேணாம். சிந்தித்து செயல்படவும். கணவருக்கு அல்லது மனைவிக்கு வெளிநாட்டிலிருந்து எதிர்பாராத பெரிய நன்மையும் சந்தோஷமும் அளிக்கும் தகவல் வரும். எனவே திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சி நிறைந்ததாக இருக்கும். உங்க பேச்சு, செயலில் நிதானம் அவசியம். குறிப்பாப் புது மனுஷங்க கூடப் பேசும்போது இரட்டிப்பு கேர்ஃபுல்லா வார்த்தைகளை ரிலீஸ் செய்ங்க.

துலாம்

அன்புள்ள உங்களுக்கு இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்.

உறவுகளால் நன்மையும்.. சந்தோஷமும்..அனுகூலமும் ஏற்படும். அரசு வகையில் கட்ட வேண்டிய டேக்ஸ் , வரி பாக்கிகள் ஆகியவற்றைச் செலுத்துவதற்கு தேவையான பணவரவுகள், பண உதவிகள் வந்து சேரும். தந்தை என்றைக்கோ இன்வெஸ்ட் செய்திருந்த அமவுன்ட் ஒன்று பல்கிப் பெருகி உங்களை வந்தடையும். நீங்க பிசினஸ் செய்யறீங்களா? சக வியாபாரிகளை அனுசரிச்சு நடந்துகொள்வது நல்லது. வியாபாரத்தை முன்னிட்ட கடன்கள் வாங்குவதைத் தவிர்க்கவும். பாக்கித் தொகை வசூலாவதில் தாமதம் இருந்தாலும் கடைசில வசூல் செய்துடுவீங்க. பொருளாதார வசதிக்குக் குறைவில்லை. எதிர்பாராத பொருள் சேர்க்கைக்கும் வாய்ப்பு இருக்கிறது. வராது என்று நெனைச்ச கடன் தொகை கைக்கு வரும். வழக்குகளில் இழுபறியான நிலையே காணப்படுகிறது. திருமண முயற்சிகள் நல்லபடியாக முடியும்.

விருச்சிகம்

அன்புள்ள உங்களுக்கு இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்.

இந்த வாரம் பக்தி மார்க்கத்தில் ஈடுபாடு அதிகரிக்கும். எதிர்பாராத தனவரவுகள் இருக்கும். அரசுப் பணியாளர்களுக்கு எதிர்பார்த்தபடி தலைமைப் பதவிகள் தேடி வரும். நல்ல வகையான உணவு வகைகளை உட்கொள்வாங்க. டீக்காக உடையணிந்து ஆட்களை அசத்துவாங்க.  வார மத்தியில், குடும்பத்துல  சுபகாரியப் பேச்சுக்கள் பேசப்படும். இளைஞர்களுக்கு அரசு வேலை வாய்ப்புகள் பிரகாசமாக இருக்கும். அடிக்கடி தன்னம்பிக்கை குறையும். அனுமதிக்காதீங்க. உங்களை நீங்களே கண்ணாடியில் பார்த்து “நீ திறமைசாலி” என்று நினைவூட்டிக்கிட்டே இருங்க. ஆபீஸ்ல வேலைச் சுமை அதிகரிக்கும். ஆனாலும் அதற்கேற்ற சலுகைகளும் கெடைக்கும் என்பதால் உற்சாகமாகப் பணிபுரிவீங்க. சக பணியாளர்கள் ஒங்களோட பணிகளுக்கு உதவுவாங்க. வியாபாரத்துல போட்டிகளைச் சமாளிச்சுவிடுவீங்க. லாபமும் எதிர்பார்த்தபடி கெடைக்கும்.

தனுசு

அன்புள்ள உங்களுக்கு இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்.

இந்த வாரம் புது தெம்பும், உற்சாகமும் வழக்கதைவிடவும் இன்கிரீஸ் ஆகும். வாகன வசதிகள் மேம்படும். அந்தஸ்து உயரும். தொலை தூரத்திலிருந்து.. ஐமீன் வெளிநாடாய்க்கூட இருக்கலாம்.. நற்செய்திகள் வந்து மகிழ்ச்சி அளிக்கும். பக்தி அதிகரிக்கும். ஸோ நிம்மதியும் அமைதியும் கருணையும் கூடுதலாகும். சிலருக்கு அதிகாரப் பதவியும், அமைச்சர் போன்ற பதவிகளும் கெடைக்கும். கவர்மென்ட் அல்லது வங்கியில் வேலை பாக்கறவங்களுக்கு அதிக நன்மை உண்டு. நண்பர்களிடம் சுமுகமாக இருக்க முயற்சியுங்கள். பயணங்களால் செலவுகள் அதிகமாகும், ஆதலால் பணமுடையும் இருக்கும்.பணிபுரிவர்களுக்கு வேலையில் சிரத்தையும், மாணவர்களுக்கு கல்வியில் தேர்ச்சியும் உண்டாகும்.  ஆபீசில் மேலதிகாரிகளின் தயவால் அனுகூலமான பலன்களை அடைவீங்க. நன்றியை நல்ல முறைல தெரிவிப்பீங்க.

மகரம்

அன்புள்ள உங்களுக்கு இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்.

எந்த விஷயத்தை எடுத்தாலும் அதில் தடை, தாமதங்கள் ஏற்படும், வேலைகளை முடிக்க தேவையற்ற அலைச்சல்கள் ஏற்படும். அதனால என்னங்க? ஃபைனல் ரிசல்ட் அருமையா இருக்கும். அதுதானே முக்கியம்.  பழைய நண்பர்களைச் சந்தித்துப் பேசிப்பழக வாய்ப்பு உள்ளது. அலுவலக சம்பந்தமான வெளியூர் அல்லது வெளிநாட்டுப் பயணத்தின் போது  கொஞ்சமே கொஞ்சம் எச்சரிக்கையுடன் இருக்கறது பெட்டர்ங்க. வீட்ல மகன் அல்லது மகளால சற்று அதிகச் செலவுகள் ஏற்படும். கையைக் கடிக்காது. வேலை விஷயமாக அலைச்சல்கள் ஏற்படும். அதில் ஒன்றிரண்டு வீண் அலைச்சலா இருந்தாலும் வெறுப்போ விரக்தியோ ஏற்படும் அளவுக்கு இருக்காது. டோன்ட் ஒர்ரி. வியாபாரத்தை விரிவுபடுத்தும் முயற்சிகள் சாதகமாக முடியும். தேவையில்லாத பயம் ஒண்ணு மனசை அரிக்கும். அனேகமா அது கற்பனை பயம்தான். தூக்கிப்போடுங்க.

கும்பம்

அன்புள்ள உங்களுக்கு இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்.

இந்த வாரம் வாழ்க்க வசதிகள் கூடும். சுபசெய்திகளால் மனம் மகிழும். வெளிநாட்டுப் பயணம் மற்றும் பிசினஸால்  தன லாபம் அதிகரிக்கும். தப்புன்னு மனசுக்குத் தெரிஞ்ச சமாசாரம் எதையும் செய்ய வேண்டாங்க. செலவுகளைக் குறைத்து சேமித்து வைப்பது எதிர்காலத்துக்கு பயன்படும். வியாபாரத்துல போட்டிகளைச் சமாளிக்க கடினமாக உழைக்க வேண்டியது வரும். விவசாயிகளுக்கு அதிக மகசூல் ஏற்பட்டு, இலாபத்தால் வசதிகள் பெருகும். சிலருக்கு  உழைப்பு அதிகமாகும். அதனால் என்னங்க. அந்த உழைப்புக்கேற்ற இலாபமோ, பலனோ கண்டிப்பாக் கெடைக்கும். ஒரு சின்ன தாமத்துக்குப் பிறகு.   அறிவாற்றல் பிரகாசமாகும். செயல்திறன் அதிகரிக்கும். புதுத்தெம்பு மற்றும் உற்சாகமும் கூடும். சிறு அளவில் ஆரோக்கியம் பாதிக்கப்படலாம். உடனே சரியாயிடும். ஒரு சிலருக்கு புண்ணிய ஸ்தலங்களுக்குச் சென்று வரும் வாய்ப்பு கெடைக்கும்.

மீனம்

அன்புள்ள உங்களுக்கு இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்.

நன்மை ஏற்படும். சிலருக்குக் கௌரவப் பட்டங்கள் கெடைக்கும். இரவுப் பயணங்களில் எச்சரிக்கை தேவை. பல திசைகளில் இருந்தும் பணம் கூடுதலாக வரும். கணவருடன் / மனைவியுடன் கருத்து வேறுபாடு ஏற்படாதிருக்க அனுசரித்துச் செல்வது நல்லது. எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு தொழிலில் புதிய திட்டங்களைத் தீட்டி முன்னேற முயல்வீங்க. முயற்சிகளின் சற்று ஆமை வேகத்தில் இருந்தாலும் முயலும் ஆமையும் கதை மாதிரிக் கடைசில வின் பண்ணிடுவீங்க. (முயலாமைதானே தப்பு). வீட்டில் அமைதியும், நிம்மதியும் நிலவும். பொருளாதார நிலை திருப்தி தருவதாக இருக்கும். தேவையற்ற செலவுகள் எதுவும் இல்லை என்பதால் சிறிது சேமிக்கவும் முடியும். திருமண முயற்சிகளில் ஈடுபட அனுகூலமான வாரம்.  சிலர் வேறு வசதியான வீட்டுக்கு மாறும் வாய்ப்பு ஏற்படும். யாரைப் பற்றியும் யாரிடமும் கமென்ட் செய்ய வேணாம்.