சென்னை

டிகர் மன்சூர் அலிகான் மகன் போதைப் பொருள் விற்பனை வழக்கில் ஜாமீன் கோரி மனு அளித்துள்ளார்.

சென்னை முகப்பேரில் உள்ள தனியார் கல்லூரி மாணவா்களுக்கு கைப்பேசி செயலி மூலம், போதைப்பொருட்களை விற்பனை செய்ததாக கல்லூரி மாணவா்கள் 5 போ் ஜெ.ஜெ.நகா் போலீஸாரால் கைது செய்யப்பட்டனா். விசாரணையில்  ஆந்திரத்திலிருந்து கஞ்சா, மெத்தம்பெட்டமைன் போன்ற போதைப் பொருளை தனியார் கல்லூரி மாணவா்களுக்கு விற்பனை செய்தது தெரியவந்தது.

இந்த போதைப்பொருள் விற்பனையில் மன்சூர் அலிகானின் மகன் அலிகான் துக்ளக்குக்கு தொடா்பு இருப்பது விசாரணையில் தெரியவந்ததால் ஜெ.ஜெ.நகர் காவல்துறையினர் அவரை கடந்த டிசம்பர் 4ஆம் தேதி கைது செய்தனர் இந்த வழக்கை விசாரித்த சென்னை அம்பத்தூர் நீதிமன்றம், அலிகான் துக்ளக்கின் ஜாமின் கோரிய மனுவை தள்ளுபடி செய்து அவரை நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க உத்தரவிட்டது.

எனவே அலிகான் துக்ளக் ஜாமின் வழங்க கோரி சென்னை போதைப்பொருள் தடுப்பு நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில், தன்னிடம் போதைப் பொருட்கள் எதுவும் இல்லாத நிலையில் தான் கைது செய்யப்பட்டதாகவும், போதைப்பொருள் கடத்தல் வழக்கில் தனக்கு எந்தவித தொடர்பும் இல்லை என தெரிவித்துள்ளார்.