கோவை: கோவையில் சட்டவிரோத துப்பாக்கி விற்பனை செய்த 3 பேரை மாநகர காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கோவையில் 50க்கும் மேற்பட்டோரை வெடிகுண்டு வைத்து கொன்ற அல்உம்மா பயங்கரவாதியின் இறுதி ஊர்வலம் பிரமாண்டமாக நடத்தப்பட்டது, இதை எதிர்த்து பாஜக தலைமையில் கருப்புகொடி ஆர்ப்பாட்டமும் நடைபெற்றது. இவைகள் சர்ச்சையை ஏற்படுத்தி உள் நிலையில், தற்போது சட்ட விரோதமாக நாட்டு துப்பாக்கி விற்பனை நடைபெற்று வந்துள்ளது தெரிய வந்துள்ளது. இதுதொடர்பாக 3 பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.
இதுதொடர்பான விற்பனையில், பீஹாரில் இருந்து நாட்டுத் துப்பாக்கி வாங்கி வந்து கோவையில் விற்பனை செய்து வந்தது தெரிய வந்துள்ளது. இதுகுறித்து, கோவை தீவிரவாத நடவடிக்கைகள் தடுப்பு பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்த நிலையில், இதை கண்காணித்து வந்த போலீசார், கோவை சேரன் மாநகரை சில இளைஞர்களை பிடித்து விசாரணை நடத்தனர்.
கோவையை சேர்ந்த மணிகண்டன், 23, காளப்பட்டியைச் சேர்ந்த ஹரிஸ்ரீ, 23 ஆகியோரை கைது செய்து விசாரணை நடத்தியதில், அவர்கள் மறைத்து வைத்திருந்த துப்பாக்கிகள் மற்றும் தோட்டாக்களும் பறிமுதல் செய்யப்பட்டன. இதைத்தொடர்ந்து அவர்களுக்கு துப்பாக்கி விற்பனை செய்த பீஹாரைச் சேர்ந்த குந்தன் ராய், 22, என்ற வாலிபரும் கைது செய்யப்பட்டார்.
இவர்கள் எதற்காக துப்பாக்கி வாங்கினர், பயங்கரவாத செயலுக்காகவே, அல்லது யாரை கொலை செய்யும் நோக்கத்தில் வாங்கினார்களா அல்லது கூலிப்படை என்பது கு றித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும், இதற்கு முன் இதுபோன்று வேறு யார் யாருக்கு துப்பாக்கி விற்பனை செய்யப்பட்டுள்ளது என்பது பற்றியும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.