சென்னை

தேசிய பசுமை தீர்ப்ப்பாயம்  நெல்லை மாவட்டத்தில் கேரள அரசு கொட்டிய கழிவுகளை அதே அரசு தான் அகற்ர வேண்டும் என தீர்ப்பு அளித்துள்ளது.

நா:ளுக்கு நாள் கேரள மருத்துவக்கழிவுகள், அந்த மாநில எல்லையை ஒட்டி உள்ள தமிழக மாவட்டங்களில் கொட்டப்படுவது அதிகரித்து வருகிறது. அவ்வகையில் சமீபத்தில் நெல்லை மாவட்டம் கோடகநல்லூர், நடுக்கல்லூர் பகுதிகளில் கேரள மாநிலம் திருவனந்தபுரம் மண்டல புற்றுநோய் மையத்தில் இருந்து கொண்டுவரப்பட்ட அபாயகரமான மருத்துவக்கழிவுகள் கொட்டப்பட்டன.

காவல்துறையினர் இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தமிழக அரசியல் கட்சிகள் கேரள மருத்துவக்கழிவுகள் தமிழகத்தில் கொட்டப்படுவதற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.

இன்று சென்னையில் உள்ள தென்மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயம் வெளியிட்டுள்ள உத்தரவில்,

”நெல்லை மாவட்டத்தில் கொட்டப்பட்ட மருத்துவக் கழிவுகளை கேரள அரசே அகற்ற வேண்டும். மருத்துவக் கழிவுகளை 3 நாட்களுக்குள் கேரள அரசு பொறுப்பேற்று அகற்ற வேண்டும்.

மருத்துவக் கழிவுகளை கேரளாவுக்கே கொண்டு செல்ல வேண்டும். நெல்லை மாவட்டத்தில் கழிவுகளை மேலாண்மை செய்யும் ஒரு நிறுவனத்திடம் கேரள அரசு வழங்கலாம்.

எனக் கூறப்பட்டுள்ளது.