2023ல் தங்கத்தின் விலை 15 சதவீதம் உயர்ந்ததைத் தொடர்ந்து 2024ல் மேலும் 22 சதம் உயர்ந்துள்ளது.

இதனால் தங்கள் பட்ஜெட்டிற்கு ஏற்ற வகையில் குறைந்த கேரட் நகைகளை தேர்வு செய்வதில் மக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

22 கேரட் ஆபரணத் தங்கத்தை தேர்வு செய்பவர்களை விட 18 காரட் தங்கத்தை வாங்குபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

இதனால் 18 காரட் தங்கத்திற்கான தேவை அதிகரித்து வருவதாக நகை வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்,

இது 22 கேரட் தங்கத்தின் தேவையை விட 20 சதவீதம் குறைவு என்றபோதும் இதன் தேவை அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது.

அதேபோல் குறைந்த கேரட் தங்கம் சிறந்த வடிவமைப்புடன் கூடிய நகைகளை தயாரிக்க உதவுவதும் ஒரு காரணமாகக் கூறப்படுகிறது.

தவிர அதிகரித்து வரும் திருமண செலவுகளுக்கு மத்தியில் அனைத்து பண்டிகை மற்றும் நிகழ்ச்சிகளுக்கும் அணிந்து செல்லக்கூடிய வகையில் நீடித்து உழைக்கும் இந்த குறைந்த கேரட் தங்க நகைகளுக்கு முன்னுரிமை அளிப்பதாகத் தெரிகிறது.