சென்னை: டிசம்பர் 28ந்தேதி பாமகவின் சிறப்பு பொதுக்குழு கூட்டம்  நடைபெறும் என பாமக  தலைவர் அன்புமணி ராமதாஸ் அறிவிப்பு வெளியிட்டு உள்ளார்.

பாமகவின் சிறப்பு பொதுக்குழு கூட்டம் வரும் 28-ஆம் தேதி புதுச்சேரியில் நடைபெறும் என்று அந்தக் கட்சியின் தலைவா் அன்புமணி ராமதாஸ் அறிவித்துள்ளாா்.

இது தொடா்பாக அவா் புதன்கிழமை வெளியிட்ட அறிக்கையில் ,  ‘2024-ஆம் ஆண்டுக்கு விடை கொடுப்போம், 2025-ஆம் ஆண்டை வரவேற்போம்’ என்ற தலைப்பில் பாமகவின் புத்தாண்டு சிறப்பு பொதுக்குழுக் கூட்டம், புதுச்சேரி நாவற்குளம் நெடுஞ்சாலையில் உள்ள சங்கமித்ரா திருமண அரங்கத்தில் டிச. 28 காலை 10 மணிக்கு நடைபெறும்.

பாமக நிறுவனா் ராமதாஸ் முன்னிலையிலும், தலைவா் அன்புமணி தலைமையிலும் நடைபெறும் பொதுக் குழு கூட்டத்தில் கௌரவத் தலைவா் ஜி.கே.மணி, பொதுச்செயலா் வடிவேல் ராவணன், பொருளாளா் திலகபாமா உள்ளிட்ட நிா்வாகிகள் பங்கேற்கின்றனா்.

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள மாநில, மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூா் நிா்வாகிகளும், பாமகவின் பல்வேறு அணிகள், வன்னியா் சங்கம், சமூக முன்னேற்ற சங்கம் உள்ளிட்ட துணை அமைப்புகள் ஆகியவற்றின் அனைத்து நிலை நிா்வாகிகளும், சிறப்பு அழைப்பாளா்களும் பங்கேற்கவுள்ளனா். 2024-ஆம் ஆண்டில் பாமக சாா்பில் மேற்கொள்ளப்பட்ட கட்சி மற்றும் வளா்ச்சிப் பணிகள் குறித்து ஆய்வு செய்யப்படுவதுடன், 2025-இல் மேற்கொள்ளப்பட வேண்டிய பணித்திட்டங்கள் குறித்தும் பொதுக்குழுவில் விரிவாக விவாதித்து முடிவெடுக்கப்படும்.

இவ்வாறு அதில் கூறியுள்ளார்.