சென்னை

த்திய அமைச்சர் அமித்ஷாவின் பேச்சுக்கு தமிழ்க முதல்வர் மு க ஸ்டாலின் மற்றும் துணை முதல்வர் உதயநிதி ஆகியோர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

மத்திய உள்துறை அமைச்ச்ர் அமித்ஷா நேற்று நாடாளுமன்ற மாநிலங்களவையில் அரசியல் சாசனம் பற்றிய 2 நாள் விவாதத்தின் முடிவாக பேசும்போது, அம்பேத்கரை பற்றி சர்ச்சையாக பேசினார் என கூறப்படுகிறது. மேலும் அவர் அம்பேத்கரின் பெயருக்கு பதிலாக கடவுள் பெயரை கூறலாம் என அமித்ஷா பேசியுள்ளார்.

இதையொட்டி நாடாளுமன்ற இரு அவைகளும் இன்று காலை கூடியபோது, எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டன. நாடாளுமன்ற வளாகத்தில் இந்தியா கூட்டணி எம்.பி.க்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு அம்பேத்கரை பற்றிய சர்ச்சைப் பேச்சுக்கு உடனடியாக அமித்ஷா மன்னிப்பு கேட்க வேண்டும் என வலியுறுத்தினர்.

அமித்ஷாவின் சர்ச்சை பேச்சு குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப்பதிவில்,

“அதிக பாவங்கள் செய்பவர்கள்தான் புண்ணியத்தைப் பற்றிக் கவலைப்பட வேண்டும். நாட்டைப் பற்றியும் மக்களைப் பற்றியும் அரசியல் சட்டத்தின் பாதுகாப்பு பற்றியும் கவலைப்படுவோர் புரட்சியாளர் அம்பேத்கர் பெயரைத்தான் சொல்வார்கள்! சொல்ல வேண்டும்”

என்று தெரிவித்துள்ளார்.

துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப்பதிவில்

எதற்கெடுத்தாலும் அம்பேத்கர்.. அம்பேத்கர்.. என்று சொல்கிறார்கள்” என மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா அவதூறாக பேசியிருப்பதை வன்மையாக கண்டிக்கிறோம். எப்படி எங்கே செல்லலாம் என டூரிஸ்ட் கைடு வேலை பார்ப்பதற்கு பதிலாக, உள்துறை அமைச்சர் பொறுப்பை அமித்ஷா முதலில் சரிவர கவனிக்கட்டும்.

அண்ணல் அம்பேத்கர் தந்த அரசியலமைப்பு சட்டத்தை எப்படியாவது சிதைக்கலாம் என்று கங்கணம் கட்டி அலையும் பாசிஸ்ட்டுகளுக்கு, அம்பேத்கரின் பெயரைக் கேட்டாலே எரிச்சல் வருகிறது என்றால், இன்னும் பல நூறுமுறை அண்ணலின் பெயரை குரல் உயர்த்திச் சொல்வோம். வாழ்க அம்பேத்கர்! அம்பேத்கர் புகழ் ஓங்கட்டும்”

என்று தெரிவித்துள்ளார்.