சென்னை; கூட்டுறவுத்துறை சார்பில்  குறைந்த விலையில், விற்பனை செய்யப்படும் பொங்கல் சிறப்பு தொகுப்புகள் இன்று முதல் கூட்டுறவு அங்காடிகளில் விற்பனை செய்யப்படுவதாக கூட்டுறவுத்துறை தெரிவித்து உள்ளது.

அதன்படி, குறைந்தபட்சம் ரூ.199, ரூ.499, ரூ.999 என மூன்று வகைகளில் பொங்கல் பரிசு தொகுப்புகள் விற்பனை செய்யப்படுகின்றன. சென்னை தேனாம்பேட்டையில் உள்ள காமதேனு கூட்டுறவு அங்காடியில் வாடிக்கையாளர்களுக்கு அமைச்சர் பெரியகருப்பன் இன்று(புதன்கிழமை) பொங்கல் சிறப்புத் தொகுப்பு வழங்கி விற்பனையைத் தொடக்கிவைத்தார். இதன்படி இன்று முதல் கூட்டுறவு அங்காடிகளில் பொங்கல் சிறப்புத் தொகுப்பு விற்பனை செய்யப்படுகிறது.

ரூ. 199க்கு  விற்பனை செய்யப்படும் பொங்கல் தொகுப்புக்கு  இனிப்பு பொங்கல் தொகுப்பு என்றும், இதில்,  பச்சரிசி, வெள்ளம், ஏலக்காய், முந்திரி, உலர்திராட்சை, நெய், பாசிப்பருப்பு என ஏழு பொருட்கள் கொண்டது என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இதையடுத்து,   ரூ.499க்கு  விற்பனை செய்யப்படும் பொங்கல் தொகுப்புக்கு கூட்டுறவு சிறப்பு பொங்கல் தொகுப்பு என்றும், இதில்,  மஞ்சள் தூள், சர்க்கரை, துவரம் பருப்பு, கடலைப்பருப்பு, பாசிப்பருப்பு, தனியா, புளி, பொட்டுக்கடலை, மிளகாய் தூள், கடலை எண்ணெய், உளுந்தம் பருப்பு, மிளகு, வெந்தயம், சோம்பு, கடுகு, மிளகாய், பெருங்காயத்தூள், உப்பு, சீரகம் 19 பொருட்கள் கொண்டது என்றும்,

ரூ.999க்கு  விற்பனை செய்யப்படும் பொங்கல் தொகுப்புக்கு  பெரும் பொங்கல் தொகுப்பு என்றும், இந்த தொகுப்பில்,  மஞ்சள் தூள், சர்க்கரை, உப்பு, துவரம் பருப்பு, உளுந்தம் பருப்பு, கடலைப்பருப்பு, பச்சை பட்டாணி, பாசிப்பருப்பு, வெள்ளை கொண்டைக்கடலை, வேர்க்கடலை, பொட்டுக்கடலை, மிளகாய், புளி, தனியா, கடுகு, மிளகு, சீரகம், வெந்தயம், சோம்பு, ஏலக்காய், கடலை எண்ணெய், வரகு, சாமை, திணை, ரவை, அவல், ராகி மாவு, கோதுமை மாவு, ஜவ்வரிசி, வறுத்த சேமியா, மல்லித்தூள், சாம்பார் தூள், மிளகாய் தூள், பெருங்காயத்தூள், கைப்பை என 35 பொருட்கள் கொண்டது என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

தேவைப்படும் பொதுமக்கள் கூட்டுறவு அங்காடிகளுக்கு சென்று தங்களது தேவையான தொகுப்பை வாங்கிக்கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டு உள்ளது.