சென்னை: இன்று சென்னை உட்பட 4 மாவட்டங்களில் கனமழை முதல் அதிகனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதால் ஆரஞ்சு அலெர்ட்  விடுக்கப்பட்டு உள்ளது.

தமிழகத்தில் வடகிழக்குப் பருவ மழை தீவிரமடைந்துள்ள நிலையில் பல மாவட்டங்களிலும் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில்  வங்கக்கடலின் மத்திய பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி நேற்று தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவியது. இது, அடுத்த இரு தினங்கள் (இன்று, நாளை) மேலும் வலுப்பெற்று, மேற்கு-வடமேற்கு திசையில், தமிழக கடலோரப் பகுதிகளை நோக்கி நகரக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.

இதன் காரணமாக,  வடகடலோர தமிழகத்தில் அநேக இடங்களிலும், இதர தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று  தெரிவித்துள்ளது.

அதன்படி, இன்று சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், விழுப்புரம், கடலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மற்றும் புதுவையில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது. ல் கன முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்பிருப்பதால் ஆரஞ்சு அலெர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

அதே சமயம், இன்று விழுப்புரம் மற்றும் கடலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், புதுவையிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.