கோவை: கோவையில் தொடர் குண்டுவெடிப்பு நடத்தி 46பேரை கொன்றும், 2ஆயிரத்துக்கும் மேற்பட்டோரை ரத்தக்காயம் ஏற்படுத்திய கொடூர குண்டு வெடிப்பு வழக்கின் பிதாமகனான, ஆயுள்தண்டனை கைதி ‘அல் உம்மா’ இயக்க தலைவர் பாஷா காலமானார்.. அவரது உடல் இன்று அடக்கம் செய்யப்படுகிறது. இதையடுத்து பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
உலகம் முழுவரும் பரபரப்பை ஏற்படுத்திய கோவை குண்டுவெடிப்புக்கு காரணமான கோவையைச் சேர்ந்த பயங்கரவாதி பாஷா. இவர் அல்உம்மா பயங்ரகவாத அமைப்பின் தமிழகத்தின் தலைவராக இருந்து செய்யப்பட்டு வந்தார். இவர் தலைமையிலான பயங்கரவாத குழுவினர். 1998ம் ஆண்டு பிப்ரவரி 14-ஆம் நாள் கோயம்புத்தூர் நகரில் பெரும் குண்டுவெடிப்பை நடத்தி அப்பாவிகளை கொன்று குவித்தனர். நகரின் பல இடங்களில் அடுத்தடுத்து குண்டுகள் வெடிக்கப்பட்டன. அதனப்டி, நகரில் 11 வெவ்வேறு இடங்களில் 12 கிமீ சுற்றுவட்டத்தில் மொத்தம் 13 குண்டுகள் வெடிக்கப்பட்டன. 4 குண்டுகள் ஆர். எஸ். புரம் என்ற இடத்திலும், இரண்டு பேருந்து நிலையத்திற்கு அருகிலும், ஒன்று கோயம்புத்தூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அருகிலும், மற்றொன்று “உக்கடம்” பகுதியிலும் வெடித்தன.
கோவையையே ரத்தக்காடாக்கிய இந்த இத்தொடர் கொடூர குண்டுவெடிப்பில், 35 ஆண்கள், 10 பெண்கள், ஒரு குழந்தை உட்பட மொத்தம் 46 பேர் கொல்லப்பட்டனர். மேலும் 2000 பேர் காயமடைந்தனர். பாஜக தலைவர் எல். கே. அத்வானி உரையாற்றவிருந்த இடத்துக்கு 100 மீ. தூரத்திலேயே முதலாவது குண்டு வெடித்தது. இக்குண்டுவெடிப்பு தொடர்பான விசாரணையில் இதற்கு அல் உம்மா என்ற தீவிரவாத அமைப்பு காரணமெனக் குற்றம் சாட்டப்பட்டது.
இது தொடர்பான வழக்கில், கோவை தெற்கு உக்கடம் ரோஸ்கார்டனை சேர்ந்த அல்-உம்மா இயக்க தலைவரான எஸ்.ஏ.பாஷா உள்பட பலரை போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கில் எஸ்.ஏ.பாஷாவுக்கு ஆயுள்தண்டனை விதிக்கப்பட்டது. கடந்த 25 ஆண்டுகளாக கோவை மத்திய ஜெயிலில் இருந்த எஸ்.ஏ.பாஷாவுக்கு, வயது மூப்பு காரணமாக உடல் நலம் பாதிக்கப்பட்டது. கடந்த ஏப்ரல் மாதம் சிகிச்சைக்காக பரோலில் வந்த அவர் வீட்டிலேயே சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில், இவரது உடல்நிலை மோசம் மோசமடைந்த நிலையில், நேற்றுமுன்தினம் தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி இறந்தார்.
அவரது உடல் இன்று மாலை கோவை ஆர்.எஸ்.புரம் பூ மார்க்கெட் பகுதியில் உள்ள திப்புசுல்தான் ஹைதர் அலி பள்ளிவாசல் கபர்ஸ்தானில் உடல் அடக்கம் செய்யப்பட உள்ளது. இதற்காக அவரது உடல் அவரது வீட்டில் இருந்து ஊர்வலமாக எடுத்து வரப்படுகிறது. இதனையொட்டி கோவை மாவட்டத்தில் அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் இருக்கும் வகையில் இன்று பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
கோவை மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் தலைமையில் 5 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். கோவை மட்டுமின்றி, வெளியூரை சேர்ந்த போலீசாரும் வரவழைக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. எஸ்.ஏ.பாஷாவின் வீடு, அந்த பகுதி, ஊர்வலம் செல்லும் பகுதி, பொதுமக்கள் அதிகம் கூடும் பகுதிகளான பஸ் நிலையம், ரெயில் நிலையம், கடைவீதிகள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. மாவட்ட எல்லையில் உள்ள சோதனை சாவடிகளிலும் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அந்த வழியாக வரும் வாகனங்களும் தீவிர சோதனைக்கு உட்படுத்தப்பட்ட பின்னரே மாவட்டத்திற்குள் அனுமதிக்கப்பட்டு வருகின்றன.