வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவானதை அடுத்து தமிழ்நாட்டின் கடற்கரையோர மாவட்டங்களில் அடுத்த 2 நாட்களுக்கு கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது.
தெற்கு வங்கக் கடலின் மத்திய பகுதிகளில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது.

இது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதியாக வலுப்பெற்று அடுத்த 2 நாட்களில் மேற்கு-வடமேற்கு திசையில் தமிழ்நாட்டின் கடற்கரையை நோக்கி நகரும்
இதனால் தமிழ்நாட்டில் டிசம்பர் 17 மற்றும் 18 ஆகிய தேதிகளில் கனமழை பெய்யக்கூடும் இதை அடுத்த 2 நாட்களுக்கு ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
கடலூர், விழுப்புரம், மயிலாடுதுறை மற்றும் செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் நாளை (டிச.17) மிக கனமழைக்கு வாய்ப்பு
நாளை மறுநாள் (டிச.18) சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், கடலூர் மற்றும் விழுப்புரம் மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.