விருதுநகர்: ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் அர்த்த மண்டபத்திற்குள் இளையராஜாவுக்கு அனுமதி மறுக்கப்பட்டது ஏன் எனப்து குறித்த கோவில் நிர்வாகம் சார்பில் விளக்கம் வெளியிடப்பட்டு உள்ளது.
ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் அர்த்த மண்டபத்திற்குள் சென்ற இளையராஜா அங்கிருந்து வெளியேற்றப்பட்டது சர்ச்சையாகி உள்ள நிலையில், அனுமதி மறுக்கப்பட்டது குறித்து கோவில் நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது.
ஆண்டாள் கோயிலில் இளையராஜா அவமதிக்கப்படவில்லை. கோயில் நிர்வாகம் சார்பில் அவருக்கு முழு மரியாதை அளிக்கப்பட்டது. இளையராஜாவும் ஆண்டாள் தாயாரை பக்தியுடன் மன நிறைவுடன் தரிசித்துச் சென்றார்.” என்று ஶ்ரீ சடகோப ராமானுஜ ஜீயர் சுவாமிகள் விளக்கம் அளித்துள்ளார்.
ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள பிரபலமான ஆண்டாள் கோயிலில் டிசம்பர் 15 இரவு இசையமைப்பாளர் இளையராஜா இசையமைத்து வெளியான “திவ்ய பாசுரம்” நாட்டியாஞ்சலி நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கலந்து கொள்வதற்காக மாநிலங்களவை உறுப்பினரும், இசையமைப்பாளருமான இளையராஜா ஆண்டாள் கோவிலுக்கு வருகை தந்தார். அப்போது, இளையராஜா மற்றும் ஆண்டாள் கோயிலில் உள்ள மணவாள மாமுனிகள் மடத்தின் சடகோப ராமானுஜ ஜீயர் ஆகியோருக்கு மேள தாளங்கள் முழங்க கோயில் யானையை அழைத்து வந்து வரவேற்பு அளிக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து இளையராஜா ஆண்டாள் ரெங்கமன்னாரை தரிசனம் செய்ய அர்த்த மண்டபத்திற்குள் ஜீயருடன் செல்ல முற்பட்டார். அப்போது அருகே இருந்த ஜீயர் மற்றும் பட்டர்கள் இளையராஜாவை அர்த்த மண்டபத்திற்கு வெளியே நிற்குமாறு கூறினர்
இதனையடுத்து வெளியே வந்த இளையராஜாவுக்கு அர்த்த மண்டப நுழைவு வாயிலில் வைத்து மரியாதை அளித்தனர். அங்கு நின்று இளையராஜா சாமி தரிசனம் செய்தார். மேலும் “திவ்ய பாசுரம்” நாட்டியாஞ்சலி நிகழ்ச்சியையும் கண்டுகளித்தார்.
இதை படமெடுத்த சிலர், ஆண்டாள் கோயிலில் அர்த்தமண்டபத்திற்குள் செல்ல இசையமைப்பாளர் இளையராஜாவை அனுமதிக்கவில்லை என்றும், சாதியின் அடிப்படையில் இளையராஜா உள் நுழைய அனுமதி மறுக்கப்பட்டுள்ளது என்று சில ஊடகங்கள் மற்றும் சமுக வலைதளங்களில் வீடியோவை வெளியிட்டு சர்ச்சையை ஏற்படுத்தி வருகின்றனர்.
இந்த நிலையில், கோயில் நிர்வாகம் சார்பில் ஊடகங்களிடம் விளக்கம் அளிக்கப்பட்டது. அப்போது, ஆண்டாள் கோயிலில் கருவறைக்கு முன்பு உள்ள அர்த்த மண்டபமும் கோவில் கருவறையாகவே பாவிக்கப்பட்டு வருகிறது. அதனால்தான், அர்த்த மண்டபத்திற்குள் பூஜை செய்யும் ஜீயவர்களை தவிர வேறு யாரும் உள்ளே வர அனுமதி கிடையாது. இது வழக்கமாக கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு தெரியும். ஆனால், இளையராஜாவுக்கு தெரிந்திருக்க வாய்ப்பு இல்லை. அதனால், சம்பவத்தன்று ஜீயருடன் இளையராஜாவும் அர்த்த மண்டபத்திற்குள் தவறுதலாக நுழைந்தார். அவருக்கு இதுகுறித்துதெரிவிக்கப்பட்டது. அவரும் அதை ஏற்றுக்கொண்டுக்கு அர்த்த மண்டப நுழைவு வாயிலில் இருந்து சுவாமி தரிசனம் செய்தார். இதில் எந்தவொரு பிரச்சினையும் எழவில்லை, அவருக்கும் வருத்தம் இல்லை என்று கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
ஆண்டாள் கோயிலில் இளையராஜா அவமதிக்கப்படவில்லை. கோயில் நிர்வாகம் சார்பில் அவருக்கு முழு மரியாதை அளிக்கப்பட்டது. இளையராஜாவும் ஆண்டாள் தாயாரை பக்தியுடன் மன நிறைவுடன் தரிசித்துச் சென்றார்.” என்று ஶ்ரீ சடகோப ராமானுஜ ஜீயர் சுவாமிகள் விளக்கம் அளித்துள்ளார்.
முன்னதாக ஆண்டாள் கோயிலுக்கு வந்த இளையராஜாவுக்கு இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் செல்லத்துரை தலைமையில் வரவேற்பு அளிக்கப்பட்டது. ஆண்டாள் சந்நிதி, நந்தவனம், பெரிய பெருமாள் சந்நிதி ஆகியவற்றில் ஸ்ரீ சடகோப ராமானுஜ ஜீயர், ஶ்ரீ திர்தண்டி சின்ன ஶ்ரீமன் நாராயண ராமானுஜ ஜீயர் ஆகியோருடன் சென்று இளையராஜா சுவாமி தரிசனம் செய்தார்.
ஆண்டாள் சந்நிதியில் கருவறைக்கு முன் உள்ள அர்த்த மண்டபத்திற்கு வெளியே வசந்த மண்டபத்தில் நின்றே பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுகின்றனர். நேற்று இரவு ஜீயர்களுடன் இளையராஜா சுவாமி தரிசனம் செய்ய சென்ற போது, வசந்த மண்டபத்தை தாண்ட அர்த்த மண்டப வாசல் அருகே நின்றார். அப்போது கோயில் அர்ச்சகர் சின்ன ஜீயரிடம், வசந்த மண்டபத்தில் நின்று சுவாமி தரிசனம் செய்ய வேண்டும் என கூறினார். அதை சின்ன ஜீயர் இளையராஜாவிடம் கூறியதும், அவர் அர்த்த மண்டப வாயிலில் நின்று சுவாமி தரிசனம் செய்தார்.
கோயில் அர்ச்சகர்கள் ஸ்ரீ சடகோப ராமானுஜ ஜீயர், ஶ்ரீ திர்தண்டி சின்ன ஶ்ரீமன் நாராயண ராமானுஜ ஜீயர், இளையராஜா ஆகிய 3 பேருக்கும் ஆண்டாள் சூடிய மாலை மற்றும் பட்டு வஸ்திரம் கட்டி மரியாதை செய்தனர்.
இணை ஆணையர் ஆண்டாள் படம் மற்றும் பிரசாதம் வழங்கினார். தொடர்ந்து ஆடிப்பூர கொட்டகையில் நடந்த திவ்ய பாசுரம் இசை நிகழ்ச்சி மற்றும் பரத நாட்டிய நிகழ்ச்சியை ஜீயர்களுடன் சேர்ந்து இளையராஜா கண்டு களித்தார்.
இந்நிலையில், இளையராஜா அவமதிக்கப்பட்டதாக செய்திகள் வெளியான நிலையில், “ஆண்டாள் கோயிலில் இளையராஜா அவமதிக்கப்படவில்லை. கோயில் நிர்வாகம் சார்பில் அவருக்கு முழு மரியாதை அளிக்கப்பட்டது. இளையராஜாவும் ஆண்டாள் தாயாரை பக்தியுடன் மன நிறைவுடன் சென்றார்.” என்று ஶ்ரீ சடகோப ராமானுஜ ஜீயர் சுவாமிகள் விளக்கம் அளித்துள்ளார்.