திருச்செந்தூர்
திருச்செந்தூர் கடலில் குளிக்க பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
வானிலை ஆய்வு மையம் தூத்துக்குடி மாவட்டத்தில் பெய்த தொடர் கனமழையின் காரணமாக பல இடங்களில் சாலைகளில் வெள்ள நீர் சென்றதாலும், கடலில் அலையின் சீற்றம் அதிகமாக காணப்படும் என எச்சரிக்கை விடுத்த்திருந்தது.
இதனால் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு வெளியூரில் இருந்து பக்தர்கள் வருவதை தவிர்க்குமாறு மாவட்ட ஆட்சியர் வேண்டுகோள் விடுத்திருந்தார். நேற்று முன்தினம் திருச்செந்தூர் கோவில் கடலில் குளிக்கவும், கடற்கரையில் தங்கவும் யாருக்கும் அனுமதி அளிக்கப்படவில்லை.
நேற்று காலையில் திருச்செந்தூர் கடலில் அலையின் சீற்றம் குறைந்து காணப்பட்ட\தன் காரணமாக பக்தர்கள் கடலில் பாதுகாப்பாக குளிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. தற்போது திருச்செந்தூர் கோவிலுக்கு வந்த பக்தர்கள் கடலில் புனித நீராடி வருகின்றனர்