சென்னை
நடிகர் தனுஷ் நகைச்சுவை நடிகர் சந்திர்பாபு பயோபிக் படத்தில் ந்டிக்க உள்ளார்.
‘
நகைச்சுவை மன்னன்’ என அழைக்கப்பட்ட சந்திரபாபு ஒரு புகழ்பெற்ற நடிகராக மட்டுமல்லாமல் பாட்டு, இசை, ஓவியம், நாடகம், சிற்பம் என அனைத்திலும் ஈடுபாடு கொண்ட அற்புதமான கலைஞனாகவும் விளங்கியவர் ஆவார். கடந்த 1947-ம் ஆண்டு ‘தன அமாராவதி’ என்னும் திரைப்படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தின் மூலம் சினிமாத்துறையில் முதன் முதலாக கால்பதித்தார்.
‘தென்னக சார்லி சாப்ளின்’ என்றும் அழைக்கப்பட்ட சந்திரபாபு “புதையல், சகோதரி, நாடோடி மன்னன், குலேபகாவலி, நீதி, ராஜா, பாதகாணிக்கை, நாடோடி மன்னன், கவலை இல்லாத மனிதன், அடிமைப்பெண்” உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்துள்ளா\ர். இவர் 1950 காலகட்டங்களில் எம்.ஜி.ஆர், சிவாஜி ஆகியோருக்கு நிகராக புகழ்பெற்று விளங்கியவர் ஆவார்.
தமிழ் திரையுலகின் முன்னனி நடிகரான தனுஷ் நடிகர் சந்திரபாபுவின் பயோபிக் படத்தில் நடிக்க உள்ளார் என்ற தகவல் வெளியாகி உள்ளது. விரைவில் இது தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.