சென்னை
மறைந்த மூத்த காங்கிர்ஸ் தலைவர் ஈ வி கே எஸ் இளங்கோவன் உடல் இன்று மலை தகனம் செய்யப்படுகிற்து.
தமிழக காங்கிரஸ் கட்சியில் 2 முறை தலைவராகவும், ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ.வாகவும் இருந்த ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் நுரையீரலில் ஏற்பட்ட தொற்று காரணமாக சென்னை மியாட் மருத்துவமனையில் கடந்த மாதம் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப்பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
சிகிச்சை பலன் இன்றி ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் நேற்று காலை மரணம் அடைந்தார். அவருக்கு வயது 75. மியாட் மருத்துவமனை நிர்வாகம் அதிகாரபூர்வமாக இந்த தகவலை அறிவித்ததைத் தொடர்ந்து மருத்துவமனையில் இருந்து அவரது உடல் பிற்பகல் 1 மணியளவில் சென்னை மணப்பாக்கத்தில் உள்ள அவரது இல்லத்துக்கு எடுத்து வரப்பட்டது.
அங்கு ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் உடலுக்கு முதல்வர்ர் மு.க.ஸ்டாலின் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர்கள் துரைமுருகன், எ.வ.வேலு, அமைச்சர்கள் மற்றும் பல்வேறு கட்சித் தலைவர்கள் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.
சென்னை மணப்பாக்கம் இல்லத்தில் இன்றுபிற்பகல் வரை ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் உடல் தொண்டர்கலின் அஞ்சலிக்காக வைக்கப்படுகிறது. பிறகு மாலை 4 மணிக்கு மணப்பாக்கம் மின் மயானத்தில் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் உடல் தகனம் செய்யப்படுகிறது.
ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் உடலுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக தமிழக காங்கிரஸ் பொறுப்பாளர் அஜய் குமார், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் முகுல் வாஸ்னிக் உள்ளிட்ட காங்கிரஸ் மூத்த தலைவர்கள் பலர் டெல்லியில் இருந்து இன்று சென்னை வர உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது