டெல்லி:  மத்தியஅரசு ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதாவை தாக்கல் செய்ய உள்ள நிலையில், திமுக எம்.பி.க்கள் இன்றும் நாளையும் நாடாளுமன்றத்திற்கு கட்டாயம் செல்ல வேண்டும் கட்சி  கொறடா உத்தரவிட்டு உள்ளார்.

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தொடரின் பெரும்பாலான நேரங்கள் எதிர்க்கட்சிகளின் அமளியில் முடக்கப்பட்டு வருகிறது. இடையிடையே உறுப்பினர்களின் கேள்விகளுக்கு மத்தியஅமைச்சர்கள் பதில் அளித்து வருகின்றனர்.  இதற்கிடையில்,  பேரிடர் மசோதா உள்பட சில மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டு உள்ளது.  இதைத்தொடர்ந்து, ஒரே நாடு, ஒரே தேர்தல் மசோதாவை தாக்கல் செய்ய மத்தியஅரசு முடிவு செய்துள்ளது.

இந்த ஒரே நாடு, ஒரே தேர்தல் மசோதாவுக்கு  மத்திய கேபினட்  ஒப்புதல் அளித்த நிலையில், இந்த கூட்டத்தொடரில் தாக்கல் செய்ய வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதைத்தொடர்ந்து, இன்றும் நாளையும் திமுக எம்.பி.க்கள் மக்களவை, மாநிலங்களவைக்கு வந்திருக்க வேண்டும் என்று கொறடா உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. முக்கியமான மசோதாக்கள் மீதான விவாதம் நடைபெற இருப்பதால் இந்த உத்தரவை கொறடா பிறப்பித்துள்ளார்.