கோவா

கோவாவில் நடந்த நடிகை கீர்த்தி சுரேஷின் திருமண புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

பிரபல நடிகை கீர்த்தி சுரேஷ் மலையாள படங்களில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகம் ஆனார்.   கடந்த 2013 ஆம் ஆண்டு பிரியதர்ஷன் இயக்கத்தில் வெளியான ‘கீதாஞ்சலி’ என்ற படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். பிறகு “ரஜினிமுருகன், ரெமோ, பைரவா, தானா சேர்ந்த கூட்டம், மாமன்னன், சைரன்” போன்ற படங்களில் நடித்து உள்ளார்.

கீர்த்தி சுரேஷ் ‘நடிகையர் திலகம்’ படத்தில் சாவித்ரியாக நடித்து பாராட்டை பெற்ரதுடன் அந்த படத்திற்கு தேசிய விருது வென்றார். தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகையாக வலம் வரும் இவர் தற்போது அட்லி இயக்கத்தில் உருவான பேபிஜான் என்ற இந்தி படத்தில் வருண் தவானுக்கு ஜோடியாக நடித்துள்ளார்.

கீர்த்தி சுரேஷ் தனது பள்ளி கால நண்பரான ஆண்டனியை 15 ஆண்டுகளாக காதலித்து வருகிறார். இருவீட்டிலும் திருமணத்துக்கு சம்மதம் தெரிவித்ததல். இவர்களின் காதலுக்கு மதம் ஒரு பிரச்சனையாக இல்லை.

கீர்த்தி சுரேஷ் – ஆண்டனி இருவரும் இன்று திருமணம் செய்துகொண்டனர். இந்து முறைப்படி நடைபெற்ற இந்த திருமண நிகழ்வில் நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் கலந்துகொண்டனர். இந்த திருமண நிகழ்வில் நடிகர் விஜய் கலந்துகொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

கீர்த்தி சுரேஷ் இன்ஸ்டாகிராமில் வெளியிட்ட திருமண புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகின்றன.