திருவண்ணாமலை

ரும் 13  ஆம் தேதி அன்று திருவண்ணாமலை மாவட்டத்துக்கு  உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 4 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கிய திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீபத்திருவிழாவில் தினமும் காலையில் விநாயகர், சந்திரசேகரர் வீதி உலாவும், இரவில் பஞ்சமூர்த்திகள் வீதிஉலாவும் நடக்கிறது. வருகிற 13 ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) அதிகாலையில் கோவிலில் பரணி தீபமும், மாலையில் கோவில் பின்புறம் உள்ள மலை உச்சியில் மகா தீபமும் ஏற்றப்பட உள்ளது.

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்

”திருவண்ணாமலை அருள்மிகு அருணாசலேஸ்வரர் திருக்கோவிலில் கார்த்திகை மகா தீபத் திருவிழா நாளான 2024-ம் ஆண்டு டிசம்பர் 13-ம் தேதி (வெள்ளிக்கிழமை) அன்று மாவட்டத்தில் உள்ள மாநில அரசின் ஆளுகைக்கு உட்பட்டு இயங்கும் அனைத்து அலுவலகங்களுக்கும், கல்வி நிறுவனங்களுக்கும் (தேர்வுகளுக்கு இடையூறு இல்லாமல்) அரசு சார்புடைய நிறுவனங்களுக்கும் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்படுகிறது.

இந்த விடுமுறையை ஈடுசெய்யும் விதமாக 21-ம் தேதி (சனிக்கிழமை) மேற்குறிப்பிடப்பட்ட அனைத்து அலுவலகங்களும் வேலை நாளாக செயல்படும். மேலும் மாவட்ட கருவூலம் மற்றும் சார்நிலைக் கருவூலங்கள் அனைத்தும் குறைந்தபட்ச எண்ணிக்கையுடனான ஊழியர்களைக் கொண்டு இயங்கும்.

என்று கூறப்பட்டுள்ளது