ராமநாதபுரம்: வங்கக்கடலில் மீன்பிடித்துக்கொண்டிருந்த ராமேஸ்வரம் மீனவர்கள் 14 பேர் 2 படகுகளுடன் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டு உள்ளனர். இது தமிழக மீனவர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தொடரும் இதுபோன்ற நடவடிக்கைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என மீனவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
புயல் எச்சரிக்கை காரணமாக, சுமார் ஒரு வாரம் கடலுக்குள் செல்ல தடை விதிக்கப்பட்டிருந்த தமிழக மீனவர்கள், கடந்த திங்கட்கிழமை முதல் மீண்டும் மீன்பிடிக்க கடலுக்குள் சென்றனர். ஆனால், மீன்கள் அதிகமாக கிடைக்கும் என்று எதிர்பார்த்த நிலையில் ஏமாற்றமே மிஞ்சியதாக பல பகுதி மீனவர்கள் வருத்ததுடன் தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து, நேற்று காலை மீன்பிடி அனுமதி சீட்டு பெற்றுவிட்டு 500-க்கும் அதிகமான விசைப்படகுகள் மீன்பிடிக்க கடலுக்கு சென்றனர்.
அப்போது, நெடுந்தீவு பகுதிகளிள்ல மீன்பிடித்துக்கொண்டிருந்த ராமேஸ்வரம் பகுதி மீனவர்களை கண்ட இலங்கை கடற்படையினர் அங்கு வந்து, 2 படகுகளையும், மீனவர்களை யும் கைது செய்ததுடடன், தமிழக மீனவர்களிடையடன் படகுகள், வலைகள் மற்றும் ஜிபிஎஸ் கருவிகளை சேதப்படுத்தியதுடன் அவர்களையும், படகுகளையும் இலங்கைக்கு அழைத்துச் சென்றனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த சக மீனவர்கள் இருகுறித்து ராமேஸ்வரம் பகுதி கடலோர காவல்படையிடம் புகார் அளித்தனர். இலங்கை கடற்படையினரின் அடாவடி நடவடிக்கை தமிழக மீனவர்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது.