சென்னை
எழும்பூர் மதுரை வாராந்திர அதி விரைவு ரயில் சேவை மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இன்று தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்,
”சென்னை எழும்பூர் ரெயில் நிலையத்தில் மறுசீரமைப்பு பணிகள் நடைபெறுவதால் வாராந்திர அதிவிரைவு ரெயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டு உள்ளது.
அதாவது மதுரையில் இருந்து அடுத்த மாதம் (டிசம்பர்) 5-ந் தேதி காலை 6.15 மணிக்கு புறப்படும் வாராந்திர அதிவிரைவு ரெயில் (வண்டி எண்-22624) சென்னை எழும்பூருக்கு பதிலாக தாம்பரம் வந்தடையும்.
சென்னை எழும்பூரில் இருந்து புறப்படும் வாராந்திர அதிவிரைவு ரெயில் (22623) வருகிற 6-ந் தேதி முதல் தாம்பரத்தில் இருந்து இரவு 10.30 மணிக்கு புறப்படும்.
என்று கூறப்பட்டுள்ளது.