சென்னை

ன்று தமிழகத்தின் 5 மாவட்டங்களுக்கு கனமழை காரணமாக ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

இந்திய வானிலை ஆய்வு மையம் வங்கக்கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் அடுத்த 3 மணி நேரத்தில் புயலாக வலுப்பெறும். நாளை மதியம் காரைக்கால் – மாமல்லபுரம் இடையே புதுச்சேரி அருகே கரையை கடக்கும் என்று கூறியுள்ளது  இந்தப். புயல் கரையை கடக்கும்போது மணிக்கு 90 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தின்5 மாவட்டங்களுக்கு இன்று ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. அதாவது, சென்னை, செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர் மயிலாடுதுறை, நாகை ஆகிய மாவட்டங்களில் அதிகனமழை பெய்ய வாய்ப்புள்ளது. மேலும், திருவள்ளூர், காஞ்சிபுரம், அரியலூர், தஞ்சை, திருவாரூர் ஆகிய 5 மாவட்டகளில் மிக கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

இவற்றை தவிர ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், திருச்சி, புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 8 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.