சென்னை:  சென்னையில் இன்று இரவு சம்பவம் இருக்கு என தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்து உள்ளார். இது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

தென்மேற்கு வங்கக்கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாளை காலை  வடதமிழக கடலோரத்தில் கரையைக் கடக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது. இதன் காரணமாக,   சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம்  மற்றும் புதுச்சேரி, கடலூர்  உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்யும் என எச்சரிக்கப்பட்டு உள்ளது. புயலை கரையை கடக்கும்போது,  காற்றின் வேகம் மணிக்கு 50 முதல் 60 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 70 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது. இதையொட்டி  முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளன.

இந்த நிலையில்,   தனியார் வானிலை ஆய்வாளர் தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது,

வெப்பச்சலனத்தைப் பாருங்கள் (மேகங்கள்), அமைப்பு மீண்டும் தீவிரமடைந்துள்ளது, இப்போது 30 முடிச்சுகளுக்கு அருகில் உள்ளது (குறிப்பு 35 முடிச்சுகள் சூறாவளி மற்றும் பெயர் வழங்கப்படும்).  அது மீண்டும் தீவிரமடையும் மற்றும் 35 முடிச்சுகளை மீறும் மற்றும் 40-45 முடிச்சுகள் வரை வலிமையை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக, அதிக  மழைக்கான வாய்ப்பு உள்ளது.  இந்த அமைப்பில் தீவிர மேகங்கள் இருக்கும்.

இப்போது பூக்கும் மேகங்களுடன் மழை தொடங்கும் பொழுது நண்பகல் வேளையில்… மாலை மற்றும் இரவு வரை மழை பெய்கிறது. 29 முதல் 30-ம் தேதி வரை KTCC முதல் மரக்கண்ணம் வரையிலான கடற்கரையோரங்களில் மிக கனமழை முதல் தீவிர மழை பெய்ய வாய்ப்புள்ளது. குறிப்பாக 30 ஆம் தேதி KTCC இல் மழை குறித்து நெருக்கமான கண்காணிப்பு தேவை.

அதாவது,  ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால் மேகங்கள் வலுவாக உருவாகியுள்ளதால் இன்று  மதியம் மற்றும் மாலை, இரவு நேரங்களில் மழையின் தீவிரம் அதிகரிக்கும்

இன்று முதல் 30-ஆம் தேதி வரை, குறிப்பாக சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் முதல் மரக்காணம் வரையிலான கடலோர பகுதிகளில் மிக கனமழை முதல் அதி கன மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

குறிப்பாக நாளை (30ஆம் தேதி) சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் பகுதியில் மழைக்கு துல்லியமாக கண்காணிப்பு தேவைப்படுவதாகவும் கூறியுள்ளார்.