இலங்கை மற்றும் இந்திய கடல் பகுதியை ஒட்டி வங்க கடலில் நிலைகொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் அதே இடத்தில் நீடித்து வருகிறது.

இது இன்று மாலை அல்லது இரவில் மேலும் வடக்கு மற்றும் வடமேற்கு திசையில் நகர்ந்து வரும் 30ம் தேதி காரைக்கால் மற்றும் மகாபலிபுரம் இடையே கரையைக் கடக்கும்.

இதுகுறித்து இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டிருக்கும் செய்திக்குறிப்பில் இன்று காலை 8:30 நிலவரப்படி கடந்த 6 மணி நேரமாக இந்த ஆழ்ந்த காற்றழுத்த மண்டல

ம் அதே இடத்தில் நீடித்து வருகிறது.

சென்னைக்கு தெற்கு மற்றும் தென்கிழக்கே 480 கிலோ மீட்டரில் நிலை கொண்டுள்ள இந்த தாழ்வு மண்டலம் இன்று மாலை இலங்கை கடற்பகுதியை விட்டு நகர்ந்து மணிக்கு 12 கிலோ மீட்டர் வேகத்தில் தமிழகத்தின் கடற் பகுதியை நெருங்கும்.

இதனால் செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், அரியலூர், புதுக்கோட்டை தவிர பாண்டிச்சேரி மற்றும் காரைக்காலில் இன்று கனமழை பெய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் நாளை முதல் தொடர் மழை பெய்யும் என்றும் 30ம் தேதி பலத்த மழை பெய்யும் என்றும் கூறப்பட்டுள்ளது.

கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர் தவிர பாண்டிச்சேரி மற்றும் காரைக்காலில் நாளை முதல் இரண்டு நாட்களுக்கு அதி கனமழை பெய்யும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

மேலும், இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் தமிழக கடற்கரையை நெருங்கும் போது மணிக்கு 50 முதல் 69 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசும் என்றும் சில நேரங்களில் 70 கிலோ மீட்டர் வேகத்தில் சூறைக்காற்று வீசும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வங்கக்கடலில் நிலவி வரும் இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக மீனவர்கள் யாரும் கடலுக்கு செல்லவேண்டாம் என்று எச்சரிக்கப்பட்டுள்ளனர்.