சென்னை: மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள காங்கிரஸ் மூத்த தலைவர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவனை  முதல்வர் ஸ்டாலின் நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.

உடல் நலக்குறைவு காரணமாக சென்னை மியாட் மருத்துவமனையில் மூத்த காங்கிரஸ் தலைவரும், ஈரோடு தொகுதி எம்எல்ஏவுமான இவி.கேஎஸ் இளங்கோவன் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு  நுரையீரல் சளி காரணமாக ஏற்பட்ட மூச்சுத் திணறலால் மருத்துவமனையின்  தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதுகுறித்து தகவல் அறிந்த முதலமைச்சர் ஸ்டாலின், இன்று முற்பகல் மியாட் மருத்துவமனைக்கு சென்று இவிகேஎஸ் இளங்கோவன் உடல்நிலை குறித்து கேட்டறிந்தார். பின்னர் அவருக்கு வழங்கப்படும் சிகிச்சை குறித்தும் மருத்துவர்களிடம் கேட்டறிந்தார். இவிகேஎஸ் இளங்கோவன் நலமோடு இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.