விருதுநகர்:  தமிழ்நாடு முழுவதும்  கனமழை பெய்து வருவதால் சதுரகிரி  சுந்தரமகாலிங்கம் சுவாமி கோயிலுக்கு  செல்ல பக்தர்களுக்கு தடை விதித்து வனத்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.

இந்த மாதம் (நவம்பர் 28 ஆம் தேதி ஸ்ரீகார்த்திகை மாத பிரதோஷ வழிபாடு அக்டோபர் 31 மற்றும் நவம்பர் 1ந்தேதி அமாவாசை  உள்ளது. இதையொட்டி, சதுரகிரி மலை கோயிலுக்கு  ஏராளமானோர் செல்வது வழக்கம். ஆனால், இந்த மாதம், வனத்துறை பகுதிகளில்   கனமழை பெய்து வருவதால் சதுரகிரி செல்ல பக்தர்களுக்கு தடை விதித்து வனத்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.  தொடர்ந்து பெய்து வரும் மழை காரணமாக பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் அமைந்துள்ளது பிரசித்தி பெற்ற சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயில். இந்த கோயிலானது கடல் மட்டத்திலிருந்து சுமார் 4500 அடி உயரத்தில் அமைந்துள்ளது. இந்த கோயிலுக்கு  மாதந்தோறும் பிரதோஷம், அமாவாசை , பெளர்ணமி உள்ளிட்ட விசேஷ நாட்களில் 8 நாட்கள் மட்டுமே பக்தர் கோவிலுக்கு செல்ல அனுமதி வழங்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.