ஏ.ஆர். ரகுமானின் விவாகரத்து அறிவிப்பை அடுத்து அவரைப்பற்றி தவறான கண்ணோட்டத்துடன் தகவல் பரப்புவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவரது வழக்கறிஞர் அறிவித்துள்ளார்.

ஏ.ஆர். ரகுமான் தனது மனைவி சாய்ரா பானு உடனான சுமார் 30 ஆண்டு திருமண வாழ்வை முறித்துக்கொளாவதாக கடந்த சில தினங்களுக்கு முன் அறிவித்திருந்தார்.

உணர்வுகள் காயமடைந்ததால் 30 ஆண்டு திருமண நாளை நிறைவு செய்யும் முன்னதாகவே தாங்கள் பிரிய நேர்ந்ததாக ஏ.ஆர். ரகுமான் மற்றும் அவரது சாய்ரா பானு இருவரும் கூட்டாக அறிவித்திருந்தனர்.

இந்த நிலையில், ரகுமான் குறித்து சர்ச்சை கருத்துகளுடன் சமூக வலைத்தளங்கள் மற்றும் யூ-டியூப் சேனல்களில் சில பதிவுகள் வெளியாகி இருந்தது.

இதையடுத்து தனது பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் பதிவிடுவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று இசையமைப்பாளர் ஏ.ஆர். ரகுமான் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.