சென்னை: சென்னையில் உள்ள சாலையோர வியாபாரிகளுக்கான QR Code உடன் கூடிய அடையாள அட்டையை சென்னை மாநகராட்சி வழங்கி வருகிறது. இதற்கான சிறப்பு முகாம்கள் மண்டல அலுவலகங்களில் 22ந்தேதி முதல் 30ந்தேதி வரை நடைபெறுகிறது.
சென்னையில் பதிவு செய்யப்பட்ட சாலையோர வியாபாரிகளுக்கு Chip பொருத்திய கியூஆர் கோடு (QR Code) மற்றும் இணைய இணைப்பு பயன்பாட்டுடன் கூடிய புதிய அடையாள அட்டை மாநகராட்சி சார்பில் வழங்கப்பட்டு வருகிறது.
சென்னை மாநகராட்சியில் சாலையோர வியாபாரிகளுக்கான வாழ்வாதாரத்தை மேம்படுத்துதல் மற்றும் விற்பனையை ஒழுங்குமுறைப்படுத்துதல், சட்டம் மற்றும் விதிகளை பின்பற்றி நகர விற்பனைக் குழு அமைக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. நகர விற்பனைக் குழுவின் 06.11.2024 அன்று நடைபெற்ற 8வது கூட்டத்தில் மாநகராட்சியில் பதிவு செய்யப்பட்ட 35,588 சாலையோர வியாபாரிகளின் விற்பனையை ஒழுங்குபடுத்துவதற்காக Chip பொருத்திய QR Code மற்றும் இணைய இணைப்பு (Weblink) பயன்பாட்டுடன் கூடிய புதிய அடையாள அட்டை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.
அதன்படி புதிய அடையாள அட்டை இன்று முதல் 30ம் தேதி வரை அனைத்து மண்டல அலுவலகங்களிலும் சிறப்பு முகாம்கள் மூலம் வழங்கப்பட்டு வருகிறது.
இது குறித்து பெருநகர சென்னை மாநகராட்சி நிா்வாகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில், சென்னை மாநகராட்சிக்குள்பட்ட சாலையோர வியாபாரிகளுக்கான வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும் விற்பனையை ஒழுங்குபடுத்தவும் நகர விற்பனைக் குழு அமைக்கப்பட்டது. இந்த குழுவின் 8-ஆவது கூட்டம் கடந்த நவ.6-ஆம் தேதி நடைபெற்றது. இதில் மாநகராட்சியில் பதிவு செய்யப்பட்ட 35,588 சாலையோர வியாபாரிகளின் விற்பனையை ஒழுங்குப்படுத்த ‘சிப்’ பொருத்தப்பட்ட கியூஆா் குறியீடு மற்றும் இணைய இணைப்புடன் (வெப் லிங்க்) கூடிய புதிய அடையாள அட்டை வழங்க முடிவெடுக்கப்பட்டது.
இதன்படி, புதிய அடையாள அட்டை வழங்கும் முகாம் நவ.22 முதல் நவ.30-ஆம் தேதி வரை அனைத்து மாநகராட்சி மண்டல அலுவலகங்களிலும் நடைபெறவுள்ளது. இந்த சிறப்பு முகாமுக்கு வரும் சாலையோர வியாபாரிகள், மாநகராட்சியால் முன்னதாக வழங்கப்பட்ட அடையாள அட்டை, ஆதாா் அட்டை மற்றும் கைப்பேசியைக் கொண்டு வர வேண்டும். வியாபாரிகளின் கைப்பேசிக்கு ஓடிபி எண் அனுப்பப்படும். இதன் மூலம் வியாபாரிகளின் தகவல்கள் மாநகராட்சி பதிவேட்டில் பதிவு செய்யப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.