நடிகை கஸ்தூரிக்கு எழும்பூர் குற்றவியல் நீதிமன்றம் நேற்று ஜாமீன் வழங்கிய நிலையில் இன்று அவர் சிறையில் இருந்து வெளியேறினார்.

தெலுங்கர்கள் குறித்த தரக்குறைவான பேச்சு காரணமாக தலைமறைவான நடிகை கஸ்தூரி காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

இதையடுத்து ஜாமீன் மனு தாக்கல் செய்யப்பட்டதை அடுத்து அவருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கப்பட்டது.

அதேவேளையில் பிரமானப்பத்திரம் தாக்கல் செய்வதில் காலதாமதமானதை அடுத்து நேற்று அவர் சிறையில் இருந்து விடுவிக்கப்படவில்லை.

இந்த நிலையில் ஊடகங்களில் வெளியான பேட்டியால் கஸ்தூரியின் வழக்கறிஞர் யார் என்ற குழப்பம் எழுந்ததையடுத்து அதை நடிகை கஸ்தூரி தெளிபடுத்தினார்.

தவிர, எழும்பூர் நீதிமன்றத்தில் தினமும் காலை 10 மணிக்கு ஆஜராகி கையெழுத்து போட வேண்டும் என்ற நிபந்தனையுடன் இன்று மாலை சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டார்.