சூர்

சூர் நீதிமன்ற வளாகத்தில் வழக்கறிஞர் கண்ணன் என்பவருக்கு அரிவாள் வெட்டு விழுந்துள்ளது.

ஓசூர் ஏரி தெருவை சேர்ந்த வழக்கறிஞர் கண்ணன் (வயது 30). ஓசூர் நீதிமன்ற வளாகத்தில் இருந்தபோது வழக்கறிஞர் ஆனந்தன் என்பவர் கண்ணனை சரமாரியாக அரிவாளால் வெட்டியுள்ளார்.  கண்ணன் இதில் படுகாயம் அடைந்து உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கண்ண்ணி வெட்டிய ஆனந்தன் என்பவர் அங்கிருந்து தப்பி ஓடி, அருகில் இருந்த நீதிமன்றத்தில் சரணடைந்தார். காவல்துறையினர் நடத்திய முதற்கட்ட விசாரணையில், வழக்கறிஞர் கண்ணனை அரிவாளால் வெட்டி கொலை செய்ய முயற்சி செய்தவர் பயிற்சி வழக்கறிஞர் ஆனந்தன் என்பது தெரியவந்துள்ளது.

கண்ணனை நீதிமன்ற வளாகத்தின் நுழைவு வாயில் பகுதியில் அரிவாளால் வெட்டிய ஆனந்தன், வேறொரு வழக்கறிஞரின் உதவியாளராக பணிபுரிந்து வந்துள்ளார். இவர் முன்விரோதம் காரணமாக வழக்கறிஞர் கண்ணனை வெட்டியதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கண்ணனுக்கு கழுத்து, தலை, முதுகு உள்ளிட்ட 5 இடங்களில் பலத்த வெட்டு காயம் விழுந்துள்ளது. நீதிமன்ற வளாகத்தில் பட்டப்பகலில் நடந்த சம்பவத்தால் பொதுமக்களும் வழக்கறிஞர்களும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

Hosur, Advocate, Court premises, slashed with sickle,