சென்னை

சையமைப்பாளர் ஏ ஆர் ரகுமான் விவாகரத்து குறித்து அவர் மகன் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

ரசிகர்களால்இசைப்புயல் என்று அழைக்கப்படும் ஏ.ஆர்.ரகுமான், சினிமாவில் பல விருதுகளை பெற்று பெருமை சேர்த்துடன் ஆஸ்கார் விருது வென்று இந்தியர்களுக்கு பெருமை சேர்த்தார். கடந்த ஏ.ஆர்.ரகுமானுக்கும், சாய்ரா பானுவுக்கும் 1995-ம் ஆண்டு சென்னையில் திருமணம் நடந்தது. இவர்களுக்கு கதீஜா, ரஜீமா என்ற 2 மகள்களும், அமீன் என்ற மகனும் உள்ளனர்.

திரையுலகையும் தாண்டி பொதுவெளியில் மிகவும் அன்பான தம்பதியாக ஏ.ஆர்.ரகுமான் – சாய்ரா பானு வலம் வந்தனர். தற்போது ஏ.ஆர்.ரகுமானை விட்டு பிரிவதாக அவரது மனைவி சாய்ரா பானு அறிவித்துள்ளார்,  தங்களுக்கிடையே இடைவெளி ஏற்பட்டுள்ளதால் இந்த விவாகரத்து முடிவை எடுத்திருப்பதாக சாய்ரா பானு அறிவித்திருந்தார்.

ஏ.ஆர். ரகுமான், தனது எக்ஸ் வலைதளபக்கத்தில்,

“நாங்கள் 30 ஆண்டுகளை நிறைவு செய்வோம் என்று எதிர்பார்த்தோம். ஆனால், அனைத்துமே எதிர்பாராத முடிவுகளைத்தான் கொண்டுள்ளன. கடவுளின் சிம்மாசனம்கூட உடைந்த இதயங்களினால் நடுங்கும். மேலும், உடைந்தவை மீண்டும் சேராது. இந்த இக்கட்டான சமயத்திலும் உங்கள் அன்பிற்கும், எங்கள் தனியுரிமையை மதித்ததற்கும் நன்றி”

என்று பதிவிட்டிருந்தார்.

ஏ ஆர் ரகுமான் – சாய்ரா பானு விவாகரத்து அவர்களது மகன் ஏ.ஆர். அமீன், தனது இன்ஸ்டா வலைதள பக்கத்தில்,

“இந்த நேரத்தில் எங்கள் தனியுரிமையை மதிக்குமாறு அனைவரையும் கேட்டுக் கொள்கிறோம். உங்கள் புரிதலுக்கு நன்றி”

என்று பதிவிட்டுள்ளார்.