தங்கம் விலை இன்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ. 560 உயர்ந்துள்ளது. கடந்த இரண்டு நாளில் சவரனுக்கு ரூ. 1040 உயர்ந்துள்ளது.
கடந்த மாதம் தங்கம் விலை கடுமையாக உயர்ந்து அக்டோபர் 30ம் தேதி சவரன் ரூ. 59,520ஐ தொட்டது.
பின்னர் நவம்பர் முதல் வாரத்தில் மீண்டும் குறையத் துவங்கிய தங்கத்தில் விலை வீழ்ச்சிக்கு அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவு தான் காரணம் என்று கூறப்பட்டது.
இந்த நிலையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன் ரூ. 55,480க்கு விற்கப்பட்ட ஒரு சவரன் தங்கம் நேற்று ரூ. 480 உயர்ந்தது.
இன்று சவரனுக்கு ரூ.560 உயர்ந்து ஒரு சவரன் ஆபரண தங்கம் ரூ.56,520-க்கும், கிராமுக்கு ரூ.70 உயர்ந்து ரூ.7,065-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
தங்கத்தின் விலையில் ஏற்பட்டுள்ள இந்த நிலையற்ற தன்மையால் மக்களின் வாங்கும் சக்தி குறைந்து வணிகம் பெருமளவு பாதிக்கும் அபாயம் உள்ளதாக தங்க வணிகர்கள் பெரிதும் கவலையடைந்துள்ளனர்.