சென்னை

டிகை கஸ்தூரியின் கைது திமுக அரசின் பழிவாங்கும் நடவடிக்கை என நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறி உள்ளார்.

கடந்த 3 ஆம் தேதி சென்னையில் பிராமணர் சமூகத்தினர் சார்பில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் நடிகை கஸ்தூரி பேசிய உரை, மக்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. அவர் அந்த நிகழ்ச்சியில் தெலுங்கு மக்கள் குறித்து அவதூறாக பேசியதாக குற்றச்சாட்டு எழுந்தது.

அவர் தனது கருத்துக்கு வருத்தம் தெரிவித்தும், நடிகை கஸ்தூரிக்கு எதிராக சென்னை உள்ளிட்ட பல இடங்களில் புகார் அளிக்கப்பட்டு காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். அவர் முன்ஜாமீன் கேட்டு மதுரை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவை நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தள்ளுபடி செய்து கடந்த 14-ந் தேதி உத்தரவிட்டார்.

இதை தொடர்ந்து கஸ்தூரி தலைமறைவானார். காவல்துறை அவரை கைது செய்ய போலீசார் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு தனிப்படைகள் அமைக்கப்பட்டன தெலுங்கானா மாநிலம் ஐதராபாத் அருகே உள்ள பப்பலக்குடா பகுதியில் சினிமா தயாரிப்பாளர் ஹரிகிருஷ்ணனின் வீட்டில் பதுங்கி இருந்த கஸ்தூரியை காவல்துறையினர் நேற்று கைது செய்தனர். இன்று எழும்பூர் கோர்ட்டில் கஸ்தூரி ஆஜர்படுத்தப்பட்டு அவருக்கு நவம்பர் 29 வரை நீதிமன்றக் காவல். வழங்கப்பட்டுள்ளது.

நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களிடம்,

”நடிகை கஸ்தூரி கைது செய்யப்பட்டது திமுக அரசின் பழிவாங்கும் நடவடிக்கை. கஸ்தூரியை மட்டும் தனிப்படை அமைத்து கைது செய்தது உள்நோக்கம் கொண்டது”

என்று கூறியுள்ளார்.