சென்னை
நவம்பர் 29 வரை நடிகை கஸ்தூரிக்கு நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டுள்ளது.
சமீபத்தில் நடிகை கஸ்தூரி தெலுங்கு பேசும் மக்கள் குறித்து அவதூறாக பேசியது சர்ச்சையாக மாறியது. அவர் மீது காவல் நிலையத்தில் இது தொடர்பாக புகார் கொடுக்கப்பட்ட நிலையில் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து சம்மன் கொடுக்க சென்றபோது அவர் தலைமறைவானார்.
அவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் முன்ஜாமின் கேட்டு மனு தாக்கல் செய்த நிலையில் தெலுங்கு பேசும் மக்கள் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள்தான் என்று கூறிய நீதிபதி தெலுங்கர்கள் குறித்து கஸ்தூரி அவதூறாக பேசியதை ஏற்க முடியாது என்று தெரிவித்து அவருக்கு முன் ஜாமீன் வழங்க மறுப்பு தெரிவித்தது உத்தரவிட்டார்.
நடிகை கஸ்தூரியை பிடிக்க காவல்துறையினர் இரண்டு தனிப்படையை அமைத்துநேற்று அவரை ஐதராபாத்தில் அதிரடியாக கைது செய்து சென்னைக்கு அழைத்து வந்தனர்.
சென்னை சிந்தாதிரிப்பேட்டை காவல் நிலையத்திற்கு நடிகை கஸ்தூரி விசாரணைக்காக அழைத்துச் சென்ற காவல்துறையினர் அவரை எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். நடிகை கஸ்தூரிக்கு நவம்பர் 29-ம் தேதி வரை நீதிமன்ற காவல் விதித்து எழும்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.